அருண் விஜய்யின் பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!
சென்னை : குற்றம் 23 வெற்றியை தொடர்ந்து மீண்டும் அருண்விஜய், இயக்குனர் அறிவழகன் கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் பார்டர்.
அருண் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை ஆக்சன் கதையில் நடித்துள்ள அருண் விஜய்யின் பார்டர் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் நெஞ்சே நெஞ்சே ரிலீஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

வில்லனாக ரீ என்ட்ரி
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அருண் விஜய் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்து இப்போது தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் அருண் விஜய்க்கு தெலுங்கு திரை உலகிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

இரண்டாவது முறையாக கூட்டணி
அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் இவர் நடித்த தடம் திரைப்படம் தெலுங்கில் ரெட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இந்தியில் தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் தயாராகிவருகிறது. சொல்லி அடித்தது போல் ஒவ்வொரு படத்தையும் ஹிட் படங்களாக கொடுத்து வரும் அருண் விஜய் குற்றம் 23 வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இணைந்துள்ள திரைப்படம் பார்டர்.

ஆக்ஷன் கதையில்
பெரும்பாலும் ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் இந்த முறையும் ஆக்ஷன் கதையில் நடித்துள்ளார். குற்றம் 23 முழுக்க முழுக்க மெடிக்கல் மாஃபியா பற்றிய படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கம்பீரமான ராணுவ அதிகாரியாக
பார்டர் திரைப்படத்தில் அருண் விஜய் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இதில் கதாநாயகியாக ரெஜினா கஸன்ட்ரா நடித்திருக்க சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி பார்டர் உலகமெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய் செம ஸ்டைலிஸ் கம்பீரமான ராணுவ அதிகாரியாக மிரட்டியுள்ளார்.
Recommended Video

ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
இந்த நிலையில் பார்டர் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிள் "நெஞ்சே நெஞ்சே" அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் ரொமான்டிக் பாடலாக வெளியாகிறது. சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார் . கார்த்திக் மற்றும் ஜொனிதா காந்தி பாடலை பாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











