அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்க.... அருண் விஜய் அதிரடி முடிவு!

பாக்ஸர் எனும் படத்தில் அடுத்து நடிக்கிறார் அருண் விஜய்.

Recommended Video

அனாதை ஆஸ்ரமத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் வைரல் வீடியோ

சென்னை: நடிகர் அருண் விஜய்யின் புதிய படத்திற்கு பாக்ஸர் என பெயரிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக வெற்றிக்காக போராடி வந்த அருண் விஜய்க்கு 'தடையற தாக்க' படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் செய்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்று தந்தது.

Arun Vijays next is Boxer

இந்த படங்களை தொடர்ந்து, தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படமும் அருண் விஜய்யின் மார்கெட்டை உயர்த்தி இருக்கிறது.

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக தடம் திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.

இதுதவிர அருண் விஜய் வா டீல்', சாஹோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த நிலையில், அருண் விஜய்யின் பிறந்தநாளான நேற்று அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 'பாக்ஸர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் இயக்குகிறார். எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

மெல்லிய படங்களில் நடித்தால் வேலைக்கு ஆகாது என்பதால் தொடர்ந்து ஆக்ஷ்ன் படங்களையே தேர்வு செய்து வருகிறார் அருண் விஜய். அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க எனும் பழமொழியை உள்ளாங்கி இருக்கிறார் அவர். ஆனால் ஆக்ஷன் காட்சிகளுக்காக அவர் காட்டும் அர்ப்பணிப்பு பெரியது. வாழ்த்துகள் அருண் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X