அப்படியா? அருண் விஜய் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்...

By

சென்னை: அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

அருண் விஜய், இப்போது பிசியான நடிகர். நவீன் இயக்கும் அக்னிச்சிறகுகள், கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா, விவேக் இயக்கும் பாக்சர், ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் சினம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

அக்னிச்சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், ரஷ்யா உட்பட வெளிநாடுகளில் நடக்கிறது. மாஃபியா படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் சினம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார் அருண் விஜய். இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். சபீர் இசை அமைக்கிறார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதற்கிடையே, அறிவழகன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது. அருண் விஜய், அறிவழகன் இணைந்து இதற்கு முன், குற்றம் 23 படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் ஹிட்டானதால், இப்போது இணைந்திருக்கும் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜோடியாக ரெஜினா

ஜோடியாக ரெஜினா

இந்தப் படத்தில் அருண் விஜய் ஜோடியாக, ரெஜினா நடிக்கிறார். மற்றும் ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உட்பட பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார்.

டெல்லியில் ஷூட்டிங்

டெல்லியில் ஷூட்டிங்

ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் பெரும்பாலான காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக, அங்கு படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி வாங்கப்பட்டுள்ளது.

ஜிந்தாபாத்...

ஜிந்தாபாத்...

இந்நிலையில் இந்தப் படத்துக்கு ஜிந்தாபாத் என்று டைட்டில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இது உண்மைதானா என்று படக்குழுவிடம் கேட்டபோது ஏதும் சொல்ல மறுத்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக அடுத்த மாதம் படக்குழு டைட்டிலை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X