நடிகர்களுக்குள் இருக்கும் உறவை பிரிக்காதீர்கள்: அருண் விஜய் வேண்டுகோள்
நடிகர்களுக்கிடையேயான உறவை பிரிக்காதீர்கள் என அருண்விஜய் கூறியுள்ளார்
சென்னை: நடிகர்களுக்கிடையே இருக்கும் உறவை திசைமாற்றி சிதைக்காதீர்கள் என அருண் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
அருண் விஜய்க்கு இப்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதில் தியாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் "யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு வெவஸ்தை இல்லாம போச்சு.. தமிழ் ரசிகர்களுக்கு தெரியும் என ட்வீட் செய்திருந்தார்.
அது சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரெய்லருக்காக ட்வீட் செய்தது என எண்ணிய நெட்டிசன்ஸ், அருண் விஜய்க்கு எதிராக கமெண்ட் செய்தனர். பிறகு தன்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், சரியாகும் வரை அடுத்த ஒரு மணிநேரத்திற்கு மெசேஜ்களை புறக்கணியுங்கள் எனவும் கேட்டிருந்தார்.
பிறகு நேற்று ட்வீட் செய்த அவர், கணக்கில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிட்டது. நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என தெரிவித்தார்.
மேலும், இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











