பர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா?
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் பட நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
சென்னை: மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் பட நாயகர்களின் கதாபாத்திரப் பெயர் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று சிம்பு அல்லது விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'செக்கச்சிவந்த வானம்'. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், செக்கச் சிவந்த வானம் நாயகர்களின் கதாபாத்திர முதற்பார்வை போஸ்டர்கள் ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தின் பெயர் வரதன் என்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று அருண் விஜய்யின் தியாகு கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
எனவே, இன்று விஜய் சேதுபதி அல்லது சிம்பு கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











