கொழுந்து விட்டு எரியும் நெருப்பு.. அப்படியே வாய்க்குள் போன ஃபயர் பீடா.. வீடியோ போட்ட அருண் விஜய்!

சென்னை: கொழுந்து விட்டு எரியும் நெருப்புடன் இருக்கும் ஃபயர் பீடாவை நடிகர் அருண் விஜய் வாயில் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொரோனா கலவரத்தால் ஏற்பட்டுள்ள லாக் டவுன் சாதாரண மனிதர்களை மட்டுமின்றி பல பிரபலங்களையும் வீட்டுக்குள்ளே போட்டு முடக்கி வைத்திருக்கிறது.

நடிகைகள் த்ரோ பேக் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்கள் தங்களை மறக்காமல் வைத்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் ஷூட்டிங்கின் போது ஃபயர் பீடா போட்ட வீடியோவை வெளியிட்டு அருண் விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சொதப்பிய மாஃபியா

சொதப்பிய மாஃபியா

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடித்து இந்த ஆண்டு வெளியான மாஃபியா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், படத்தின் கதை கணிக்க முடிந்ததாகவும், ஸ்லோவாக காட்சிகள் நகர்ந்ததாலும், ரசிக்க முடியாமல் சொதப்பியது.

ஏவி 31

ஏவி 31

மாஃபியா படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஏவி 31 பட ஷூட்டிங்கில் பிசியாகி இருந்தார் அருண் விஜய். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார். பகவதி பெருமாள் மிரட்டும் வில்லத்தனமான ரோலில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங் நிறுத்தம்

ஷூட்டிங் நிறுத்தம்

கொரோனா கலவரத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏவி 31 படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்யின் 31வது படமாக உருவாகி வரும் ஏவி 31 படத்தின் காட்சிகள் டெல்லி மற்றும் ஆக்ராவில் படமாக்கப்பட்டு வந்தன.

ஃபயர் பீடா

ஷூட்டிங் நடுவே, படக்குழுவினருடன் டெல்லியை சுற்றிப் பார்த்த நடிகர் அருண் விஜய் ஃபயர் பீடாவை ருசி பார்த்துள்ளார். கொழுந்து விட்டு எரியும் நெருப்புடன் வாயில் சுடச் சுட பீடா போடும் வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். ஃபயர் பீடா வாய்க்குள் போன அந்த நேரம் நரகமாக இருந்தது என்றும் கேப்ஷன் போட்டுள்ளார்.

ரசிகர்கள் கலாய்

அருண் விஜய்யின் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அருண் விஜய் சார் வாய் சுட வில்லையா என்று கமெண்ட் செய்து ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் கொஞ்சம் மேலே சென்று ரெண்டு படத்தில் வரும் வடிவேலு மீமையும் போட்டு கலாய்த்துள்ளனர்.

டிவியில் தடம்

புதிய படங்கள் ரிலீசாகாத நிலையில், டிவியில் சூப்பர் ஹிட் படங்களை போட்டு, எல்லா சேனல்களும் கல்லா கட்டி வருகின்றன. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், தன்யா ஹோப், சோனியா அகர்வால், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன தடம் திரைப்படம் டிவியில் ஒளிபரப்பானதை ரசிகர்கள் அருண் விஜய்க்கு டேக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X