»   »  அருண்குமாருக்கு எங்கேஜ்மென்ட்!

அருண்குமாருக்கு எங்கேஜ்மென்ட்!

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயக்குமாரின் ஒரே மகனான நடிகர் அருண் குமாருக்கு வரும் 11ம் தேதிசென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

நடிகர் விஜயக்குமாருக்கும், முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கும் பிறந்தவர்அருண்குமார். பிரியம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருண்குமார்,பாண்டவர் பூமி, ஜனனம், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது உள்ளிட்ட பலபடங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இன்னும் ஒரு பிரேக் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்.

அவருக்கும், மதுரையைச் சேர்ந்த டாக்டர் மோகன்-சுசீலா தம்பதியினரின் மகளுமானஆர்த்திக்கும் திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ள இத் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 11ம் தேதிசென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.

நிச்சயதார்த்த ஏற்பாடுகளை விஜயக்குமார், மனைவிகள் முத்துக்கண்ணு, நடிகைமஞ்சுளா ஆகியோர் செய்துவருகிறார்கள். திருமணம் குறித்துஅருண்குமார்கூறுகையில்,

அப்பா விஜயக்குமார், அம்மா முத்துக்கண்ணு, மம்மி மஞ்சுளா ஆகியோருக்கு நான்ஒரே பையன்.

எனவே, அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணைத்தான் மணப்பேன் என்று உறுதியாககூறியிருந்தேன். அதேபோல இப்போது அவர்கள் பார்த்துள்ள ஆர்த்தியை மணம்புரியவுள்ளேன். இந்த திருமணத்தின் மூலம் அவர்களையும் சந்தோஷப்படுத்தி, நானும்சந்தோஷமடைகிறேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil