»   »  அருண்-ஆர்த்தி இன்று கல்யாணம்

அருண்-ஆர்த்தி இன்று கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயக்குமாரின் மகனான நடிகர் அருண் விஜய்க்கும், ஆர்த்திக்கும் இன்று சென்னையில் திருமணம்நடைபெறுகிறது.

ப்ரியம் படம் மூலம் நடிகராக உருவெடுத்தவர் அருண். அதன் பின்னர் எண்ணற்ற படங்களில் அவர்நடித்துள்ளார். முன்னணி நடிகராக இன்னும் அவர் வளரவில்லை என்றாலும் கூட தொடர்ந்து நல்ல படங்களாகநடித்து வருகிறார்.

அருணுக்கும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களதுதிருமணம் இன்று சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.

முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்,திரையுலகினருக்கு விஜயக்குமார் குடும்பத்தினர் பத்திரிக்கை கொடுத்துள்ளனர்.

நட்சத்திர ஹோட்டலில் திருமணத்தை வைத்திருப்பது ஏன் என்று விஜயக்குமாரிடம் கேட்டேபாது, குறுகியகாலத்தில் திருமணத்தை நிச்சயித்ததால், நல்ல கல்யாண மண்டபம் கிடைக்கவில்லை என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil