மாஞ்சா வேலும் மைல்கல்லும்! - அருண் விஜயின் நம்பிக்கை

By Staff

Manja Velu
மாஞ்சா வேலு படம் என் திரையுலக வாழ்க்கையின் மைல்கல் என்கிறார் அருண் விஜய்.

மலை மலை படத்தின் 100 வது நாள் விழாவில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "மலை மலை படம் என் வியாபார அந்தஸ்தையும், தன்னம்பிக்கையையும் உயர்த்தி இருக்கிறது. இனிமேல் ஜாக்கிரதையாக படம் பண்ண வேண்டும் என்ற எச்சரிக்கையை என்னுள் ஏற்படுத்தியது. அந்த படத்துக்குப்பின் எனக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன.

பொறுமையாக இருந்து, மாஞ்சா வேலு படத்தை மட்டும் ஒப்புக்கொண்டேன். மாஞ்சா வேலுவுக்கு இப்போது ஒரு எதிர்பார்ப்பு இருப்பதற்கு காரணமே மலை மலைதான்.

மலை மலை'யை விட மிக அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது, மாஞ்சா வேலு. இந்த படத்தில் இன்னும் அதிக சிரத்தை எடுத்து நடித்து இருக்கிறேன். எந்த கதாநாயகனும் முயற்சிக்காத அளவுக்கு, நிறைய ரிஸ்க் எடுத்துள்ளேன்.

சண்டை காட்சிகளில் ஒரு பிரமிப்பு இருக்கும். என் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக இருக்கும் இந்தப் படம்.

நாயகி தன்ஷிகாவுடன் மோதல்...?

மாஞ்சா வேலு விழாவில் நாயகி தன்ஷிகா கலந்து கொள்ளவில்லை. எங்களுக்குள் சண்டையா என்று கேட்கிறார்கள்.

படத்தில் சம்பந்தப்பட்ட எல்லோரும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரையும் வீட்டில் போய் அழைக்க முடியாது. இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய படம் கிடைப்பதே அபூர்வம். அதற்காக ஒரு விழா நடப்பது அதைவிட அபூர்வம். அதை தவறவிடாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. தவறவிட்டதால், நஷ்டம் எனக்கு அல்ல. அவர்களுக்குத்தான். எனக்கு யாருடனும் மோதல் இல்லை...." என்றார் அருண் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X