தமிழில் அமிதாப்?

By Staff

Amithab Bachan
மம்முட்டி, அர்ஜூன் இணைந்து நடிக்கும் அறுவடை படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்த அமிதாப் பச்சனை கேட்டுள்ளனராம். ஆனால் அமிதாப் தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லையாம்.

மம்முட்டி, அர்ஜூன் இணைந்து நடிக்கும் படம் அறுவடை. மம்முட்டியை வைத்து மறுமலர்ச்சி மற்றும் பாரதி கண்ணம்மா, கோலங்கள் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹென்றி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தயாரிக்கும் படம் அறுவடை.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் உருவாகிறது. மம்முடிக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். இப்படத்தில் அவர் விமான பைலட்டாக வருவது குறிப்பிடத்தக்கது.

படத்தில் படு முக்கியமான கேரக்டர் ஒன்று உள்ளது. அதாவது பிரதமர் கேரக்டர். இந்த கேரக்டர் படத்திலேயே மிகவும் முக்கியமான கேரக்டர் என்பதால் இதில் பிரபலமான ஒருவரை நடிக்க வைக்க தீர்மானித்தார் இயக்குநர் அரவிந்த்.

யாரைப் போடலாம் என்று யோசித்தபோது அமிதாப்பச்சன் நினைவுக்கு வந்துள்ளார். இதையடுத்து அவரை அணுகியுள்ளனர். அவரும் கதையைக் கேட்டுள்ளார். இருப்பினும் இதுவரை முடிவு ஏதும் சொல்லவில்லையாம். ஆனால் நடிக்க வருவார் என்ற நம்பிக்கையில், தயாரிப்பாளர் ஹென்றியும், இயக்குநர் அரவிந்த்தும் உள்ளனர்.

ஒருவேளை அமிதாப்பிடமிருந்து பச்சைக் கொடி வராவிட்டால், தமிழக அரசியலில் பிரபலமாக உள்ள யாராவது ஒருவரை நடிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அறுவடை குழு உள்ளது.

தங்கர்பச்சானின் புதிய படம் ஒன்றில் அமிதாப் பச்சன், சத்யராஜுடன் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம். எனவே அமிதாப் பச்சன் நடிக்கப் போகும் முதல் படம் அறுவடையா அல்லது தங்கர் படமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X