தனி ஒருவனை அடுத்து 15 படங்களில் நடிக்க மறுத்த அரவிந்த்சாமி: ஏன் தெரியுமா?
சென்னை: தனி ஒருவன் படத்தில் நடித்த பிறகு 15 படங்களில் நடிக்க மறுத்துள்ளார் அரவிந்த்சாமி.
அரவிந்த்சாமியின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சித்திக் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மே மாதம் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது.

அரவிந்த்சாமி
ஹேன்ட்சம் ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற வில்லனாக வந்து மிரட்டினார். அரவிந்த்சாமியால் இப்படிக் கூட நடிக்க முடியுமா என்று ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

பட வாய்ப்பு
தனி ஒருவன் படத்தில் நடித்த பிறகு அரவிந்த் சாமியை தேடி சித்தார்த் அபிமன்யு போன்ற கதாபாத்திரங்களே வந்துள்ளன. இதனால் அவர் 15 படங்களில் நடிக்க மறுத்துள்ளாராம். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க விரும்பவில்லையாம்.

நரகாசூரன்
அரவிந்த் சாமி சதுரங்க வேட்டை 2, கார்த்திக் நரேனின் நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சதுரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமி என்ன தில்லாலங்கடி வேலை பார்த்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

செக்கச் சிவந்த வானம்
அரவிந்த்சாமி மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா என்று நட்சத்திர பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











