அரவிந்த் சாமிக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாம்: கேள்விப்பட்டீங்களா?
சென்னை: நடிகர் அரவிந்த் சாமி ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக இருந்த அரவிந்த் சாமி சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு கடந்த 2013ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
கடலை அடுத்து அவர் ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் நடித்தார்.

தனி ஒருவன்
தனி ஒருவன் படத்தில் அவர் வில்லனாக நடித்தாலும் மக்களின் மனதை கவர்ந்துவிட்டார். ஹீரோவுக்கு சமமாக அவரது கதாபாத்திரமும் பேசப்பட்டது. அழகான அரவிந்த் சாமி இப்படி வில்லனாக அட்டகாசம் செய்கிறாரே என்று ரசிகைகள் தான் சற்று கவலை வருத்தப்பட்டனர்.

ஹாலிவுட்
தற்போது அவர் ஜெயம் ரவியின் போகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் பல ஆஸ்கர் விருதுகளை பெற்ற மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோடு படத்தின் தயாரிப்பாளர்கள் எடுக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளாராம்.

உண்மையா?
ஹாலிவுட் படத்தில் நடிப்பது தொடர்பக அரவிந்த் சாமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இது குறித்து அரவிந்த் சாமியிடம் கேட்டதற்கு அவர் அந்த தகவலை உறுதிபடுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

த்ருவா
தனி ஒருவன் படம் தெலுங்கில் த்ருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அரவிந்த் சாமியும் உள்ளார். படத்தை பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

மாதவன்
மணிரத்னத்தின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவரான அரவிந்த் சாமிக்கு ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்றொரு ஹீரோவான மாதவன் ஏற்கனவே ஹாலிவுட் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











