twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100% இருக்கைக்கு அரவிந்த்சாமி மறைமுக தாக்கு !

    |

    சென்னை : திரைக் கலைஞர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் காத்திருக்க வைத்திருக்கும் திரையரங்குகள் இப்பொழுது முழுவதுமாக திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் 100 சதவீத இருக்கை அனுமதி ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனினும் இன்னும் கொரானா சூழல் முற்றிலுமாக அடங்காத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது நல்லதல்ல என பலரும் எதிராக பேசி வரும் நிலையில் பிரபல தமிழ் நடிகரும் இதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஆரிக்கு எதிராக சதி நடக்கிறதா? ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிய ரசிகர்கள்.. விஜய் டிவியின் பிளான் என்ன?ஆரிக்கு எதிராக சதி நடக்கிறதா? ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிய ரசிகர்கள்.. விஜய் டிவியின் பிளான் என்ன?

    பொழுது போக்கு

    பொழுது போக்கு

    தமிழ்நாட்டில் கொரானா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு முடிவடைகின்ற நிலையில் பொது மக்களின் மிக முக்கிய பொழுது போக்கு அம்சமாக விளங்கி வந்த திரையரங்குகள் தொடர்ந்து மூடிக் கிடக்க எக்கச்சக்கமான திரைப்படங்களும் வெளியாகாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    கொரானா தொற்று

    கொரானா தொற்று

    சமீபகாலமாக கொரானா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பெரும்பான்மையான வணிக நிறுவனங்கள் தங்களது தொழிலை மீண்டும் ஆரம்பிக்க தொடங்கியிருக்க திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்தது 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்திருந்தது.

    தொடர்ந்து நஷ்டத்தை

    தொடர்ந்து நஷ்டத்தை

    அரசின் அறிவிப்பின்படி கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கை அனுமதியுடன் செயல்பட்டு வந்த நிலையில் போதுமான அளவு கூட்டம் திரையரங்குகளுக்கு வராததால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் தியேட்டர் உரிமையாளர்களின் சார்பாக நடிகர் விஜய் தமிழக அரசிடம் 100 சதவீத இருக்கைகள் கொண்டு திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அதன்படி அனுமதியும் வழங்கப்பட்டது.

    100 சதவீத இருக்கை

    100 சதவீத இருக்கை

    நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் பலரும் பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்கில் படங்களை பார்க்க ஆவலுடன் இருக்க 100 சதவீத இருக்கை அனுமதிக்கு பல்வேறு தரப்பு ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் அரவிந்த் சாமி

    நடிகர் அரவிந்த் சாமி

    இந்த வகையில் நடிகர் அரவிந்த் சாமி 100 சதவீத இருக்கை அனுமதியை மறைமுகமாக எதிர்க்கின்ற வகையில் 100 விட 50 சிறந்தது, என நறுக்குன்னு ஒரு ட்வீட் பதிவை போட, சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து கொண்டே திரையரங்குகளின் இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் அரவிந்த் சாமிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    English summary
    Arvind swamy twitter against 100% Theater
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X