சாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி!

இயக்குநர் கார்த்திக் நரேன் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என அரவிந்த்சாமி கூறியுள்ளார்.

Recommended Video

கார்த்திக் நரேன் சினிமாவுக்கு கிடைத்த வரம் : அரவிந்த் சாமி- வீடியோ

சென்னை: சினிமாவின் பொக்கிஷம் கார்த்திக் நரேன் நடிகர் அரவிந்த்சாமி புகழ்ந்துள்ளார்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தமிழ் சினிமா கண்டிராத வித்தியாசமான த்ரில்லர் திரைக்கதை மூலம் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார்.

Arvindhsamy praises Karthik Naren…!

இப்போது நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரேயா சரண், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா, சந்திப் கிஷான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்டது. படம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் அரவிந்த்சாமி, ஊட்டியில் 41 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும், பெரும்பகுதி இரவில் ஷூட் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.

மழையையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடந்ததாகக் கூறிய அவர், இயக்குனர் கார்த்திக் நரேன், சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனக் கூறினார்.

முதல் திரைப்படமான துருவங்கள் பதினாறு ரிலீஸ் ஆனபோது, இயக்குனர் மணிரத்னம் உள்பட பலர் கார்த்திக் நரேனைப் பாராட்டினர். இப்போது அவருடைய இயக்கத்தில் நடித்திருக்கும் அரவிந்தசாமி புகழ்ந்துள்ளார்.

இப்படத்திற்கு, ரோன் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார். இம்மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X