ஹீரோ .. ஹீரோ ..

By Staff

கடவுளோடு என்னை ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டுவதை ரசிகர்கள் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நடிகர் விஜய் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் புதிய கீதை. இதையொட்டி மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பகவான் கிருஷ்ணனரின்படத்தில் முகத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக விஜய்யின் முகத்தோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

முதலில் கீதை என்று தான் இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டது. இந்து அமைப்புகளின் எதிர்ப்புக் காரணமாக பெயர் புதிய கீதைஎன்று மாற்றம் செய்யப்பட்டது.

இந் நிலையில் விஜய்யை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பல பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக இந்து முன்னணியினர் இந்த போஸ்டர்களை கிழிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களை விஜய் ரசிகர்கள் புரட்டி எடுத்துவருகின்றனர்.

பல இடங்களில் இந்து முன்னணி, சிவசேனை அமைப்பினருக்கு அடி உதை விழுந்துள்ளது.

இதை அறிந்த விஜய் டென்சனாகியுள்ளார். இது போன்ற போஸ்டர்களை ஒட்டிய ரசிகர்களை அவர் கண்டித்துள்ளார். மேலும் மதுரை,திருச்சி ரசிகர் மன்ற நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து திட்டித் தீர்த்தார்.

இது தொடர்பாக விஜய் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய கீதை படத்தை இனிமையாக வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் அறிந்து சந்தோஷமடைகிறேன். மிக்க நன்றி.

சில ரசிகர்கள் அன்பினாலும், ஆசையினாலும், ஆர்வத்தினாலும் கடவுளோடு என்னை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்துள்ளனர். அதுஎனக்கு சந்தோஷத்தை அளிக்கவில்லை, மாறாக பெரும் வேதனையையே தந்துள்ளது.

நம்மைப் படைத்தவன் இறைவன். காப்பவன் இறைவன். நம்மை ஆள்பவன் இறைவன். ஆதி அந்தம் இல்லாதவன் இறைவன். இறைவன்இன்றி ஒரு அணுவும் அசையாது. அப்படிப்பட்ட இறை சக்தியோடு என்னை ஒப்பிடுவது போன்ற முறையற்ற செயல்களில் எந்தக்காரணத்துக்காகவும் நீங்கள் ஈடுபடக் கூடாது.

நல்லவர்கள், பிறர் மனதைக் காயப்படுத்தமாட்டார்கள். அப்படிச் செய்பவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது. எனது ரசிகர்கள்நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

புதிய கீதை படத்தில் இளைஞர்களுக்கு நல்ல சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறோம். அவை முறையாக சென்று சேர வேண்டுமானால், பொது மக்கள் திரளாக வந்து படத்தை நிம்மதியான சூழலில் பார்க்க ரசிகர்கள் வழி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்.

மீரா ஜாஸ்மீன் செய்த கால்ஷீட் குளறுபடிகளால் படம் வெளி வருவது கிட்டதட்ட ஒரு மாதம் தள்ளிப் போனது. பெயர் பிரச்சனையை வேறுசென்சார் போர்ட் பெரிதாக்கியது. இப்படி பல டென்சன்களுக்கு மத்தியில் வந்துள்ள இந்தப் படத்துக்கு இப்போது ரசிகர்களால் சிக்கல்ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X