»   »  மொட்டை போட ஆர்யா மறுப்பு!

மொட்டை போட ஆர்யா மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சரண் இயக்கத்தில் வட்டாரம் படத்தில் நடித்து வரும் நடிகர் ஆர்யா மொட்டை போட்டுக் கொள்வது போன்றகாட்சியில் நடிக்க மறுத்து விட்டதால் சரண் அப்செட் ஆகியுள்ளாராம்.

சரணின் இயக்கம் பிளஸ் தயாரிப்பில் உருவாகும் படம் வட்டாரம். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தநிலையில், திடீரெனஅதிலிருந்து விலகி பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்கப் போனார் ஆர்யா. இதனால்கடுப்பான சரண், தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சரண் படத்தை முடித்துவிட்டுத்தான் பாலா படத்திற்குப் போக வேண்டும் என நடிகர் சங்கமும்,தயாரிப்பாளர்கள் சங்கம் கூறி விட்டன. இதையடுத்து வேறு வழியின்றி சரண் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.

நடிக்க வந்துவிட்டாரே ஒழிய இன்னும் நான் கடவுள் பட நினைப்பிலேயே இருக்கிறாராம் ஆர்யா. இதனால்நடிககும்போது பல டேக்குகள் வாங்கி சரணை இம்சித்து வருகிறாராம்.

இருந்தாலும் சரணும் விடாமல் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில் தனக்கு திருப்தி ஏற்படும் வரைவிடாமல்வேலை வாங்கி வருகிறாராம். இதைப் புரிந்து கொண்ட ஆர்யா இப்போது ஒழுங்காக நடித்துக் கொடுப்பதாககூறுகிறார்கள்.

படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் வட்டாரம் படத்தில் வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சியைவைத்துள்ளாராம் சரண். இதற்காக ஆர்யாவிடம் நீங்கள் மொட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்றுகூறினாராம். ஆனால் முடியவே முடியாது என்றுகூறி விட்டாராம் ஆர்யா.

இப்படி நடிக்க வேண்டும் என்று நீங்கள் முதலிலேயே சொல்லவில்லை. நான் கடவுள் படத்திற்காக நான் நீண்டதலைமுடியை வளர்த்து விட்டேன். இப்போது மொட்டை போட்டால், மறுபடியும் முடி வளர நாளாகும். எனவேமொட்டை போட்டு நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம் ஆர்யா.

இதனால் சரண் அப்செட் ஆகியுள்ளாராம். ஆரம்பத்திலிருந்தே தகராறு செய்து வரும் ஆர்யாவை தனது வழிக்குக்கொண்டு வர விட்டுப்பிடிக்கமுடிவு செய்துள்ளாராம் சரண். மொட்டை போட்டே ஆக வேண்டும் என்றநிர்ப்பந்தத்தை ஆர்யாவின் மீது திணிக்கும் வகையில் சில ரகசிய அஸ்திரங்களை கையில் வைத்துள்ளாராம்.இதற்காக, கிளைமாக்ஸ் காட்சியை கடைசியில் எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

ஒருவேளை ஆர்யா ஒத்தே வராவிட்டால், கிராபிக்ஸ் டெக்னிக்கைப் பயன்படுத்தி ஆர்யாவுக்கு மொட்டை போடமுடிவு செய்துள்ளாராம். சமீபத்தில்கூட மாயக்கண்ணாடி படத்திற்காக நவ்யா நாயருக்கு இப்படித்தான் மொட்டைபோட்டார் சேரன். அதே டெக்னிக்கில் ஆர்யா தலையையும் மொட்டை போட்டு விடலாம் எனஉத்தேசித்துள்ளாராம் சரண்.

வளரும் நிலையில் உள்ள ஆர்யா இப்படி பிரபல இயக்குநரிடமே முரண்டு பிடிப்பது கேரியருக்கு நல்லதல்லஎன்பதை யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil