»   »  சரணிடம் ஆர்யா மன்னிப்பு!

சரணிடம் ஆர்யா மன்னிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வட்டாரம் படத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களுக்காக இயக்குநர் சரணிடம்பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

இயக்குநர் சரணின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வட்டாரம்.இப்படத்திற்காக ஆர்யாவை புக் செய்திருந்தார் சரண். ஆனால் திடீரென பாலாவின்நான் கடவுள் படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தது. இதனால் கடுப்பானசரண், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திடம் புகார் செய்தார்.

ஆர்யாவைக் கூப்பிட்ட இரு சங்கங்களும் முதலில் சரண் படத்தை முடிக்க வேண்டும்.பிறகு தான் பாலா படத்திற்குப் போக வேண்டும் என உத்தரவிட்டன. இதையடுத்துவட்டாரம் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் ஆர்யா. ஆனாலும், முழுமையாகஒத்துழைக்காமல் ஏனோதானோவென்று அவர் நடித்து வருவதாக செய்திகள்வெளியாகின.

இப்படியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வட்டாரம் படத்தின் ஷூட்டிங் முடிந்துதீபாவளிக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ கேசட்வெளியீட்டு விழா நடந்தது.

இதில் ஆர்யா, நெப்போலியன், ஹீரோயின்கள் அதிசயா, கீரத் உள்ளிட்டோர்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வைரமுத்துவின் வைர வரிகளில், பரத்வாஜின் ஜிலீர்இசையில் உருவாகியுள்ள 7 பாடல்கள் அடங்கிய கேசட்டுகளை வைரமுத்துவெளியிட, இயக்குநர் விஷ்ணுவர்தன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

விழாவின்போது ஆர்யா பேசுகையில், படம் ஆரம்பிக்கும் போது, எனக்கும்,சரணுக்கும் இடையே சில பிரச்சினைகள் எழுந்தன. பின்னர் சமரசமாகி நடிக்கவந்தேன்.

இந்தப் பிரச்சினைகள், ஷூட்டிங்கின் போது பிரதிபலிக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக ஷூட்டிங் நடந்த 80 நாட்களும்என்னை தனது நண்பரைப் போலவே நடத்தினார் சரண். இதனால் எனக்கு அவர் மீதுஇருந்த பயம் போய் மதிப்பும், மரியாதையும் கூடி விட்டது.

இந்த இடத்தில் நான் சரணிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அவரது மனதை நான்புண்படுத்தியிருந்தால், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்ஆர்யா.

சரண் பேசும்போது, அஜீத்துக்கு அமர்க்களம் அமைந்தது போல ஆர்யாவுக்குவட்டாரம் அமையும். அவர் பெரிய இடத்துக்கு செல்வார் என்று ஆர்யாவைப்பாராட்டினார்.

முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ள நெப்போலியன் பேசுகையில், வேட்டி,சட்டையிலேயே என்னை நடமாட விட்ட இயக்குநர்களுக்கு மத்தியில் கோட், சூட்போட்டு என்னை அழகு பார்த்தவர் சரண். சட்டசபைத் தேர்தலில் அரசியல் என்னைக்கைவிட்டது, ஆனால் சரண் கை கொடுத்து ஆதரவு தந்தார் என்றார்.

இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகளை வெளியிடும் உரிமையை யார் பெற்றுள்ளார்கள்என்பது தெரியுமா? ஆர்.பி.ஜி, எச்.எம்.வி மற்றும் சரிகம ஆகிய நிறுவனங்களுடன்இணைந்து வெளியீடு மற்றும் விற்பனை உரிமையை, சினேகாவுடன் இணைத்துபரபரப்பாக பேசப்பட்ட மலேசியாவின் நாக் ரவிக்குச் சொந்தமான ஏசியன் ஸ்கைஎன்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் பெற்றுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil