twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகைகளுக்குப் பிரச்சினைன்னா ஆலோசனை சொல்வேன்... சாப்பிடக் கூப்பிட்டா போவேன்! - ஆர்யா

    By Shankar
    |

    நடிகைகளுக்கு ஏதாவது பிரச்சினைன்னா ஆலோசனை சொல்வேன். அவங்க சாப்பிடக் கூப்பிட்டா போவேன். மத்தபடி அவங்களோடு வேற மாதிரி தொடர்பெல்லாம் இல்லீங்க... சும்மா வதந்தி பரப்பறாங்க, என்றார் ஆர்யா.

    எந்த நடிகை வாயைத் திறந்தாலும் ஆர்யாதான் எனக்குப் பிடிக்கும், எனக்கு மட்டுமல்ல எல்லா நடிகைகளுக்கும் அவரைப் பிடிக்கும் என்று சொல்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது.

    பிரியாணி மயக்கம்

    பிரியாணி மயக்கம்

    நடிகைகள் மட்டுமல்ல, ஆர்யாவின் சக நடிகர்களும் இப்படித்தான் சொல்லி வருகின்றனர்.

    பிரியாணி கொடுத்தே நடிகைகளை ஆர்யா மடக்கிவிடுவதாக அவரது நண்பரான விஷால் ஒரு பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

    நயன்தாரா

    நயன்தாரா

    ஆர்யா வீட்டுக்கு அடிக்கடி பிரியாணி சாப்பிடப் போன நயன்தாராவை, கடைசியில் அவரது கள்ளக்காதலி ஆக்கிவிட்டனர். இப்போது நயனும் விஷாலும் மாற்றி மாற்றி தங்களுக்குள் எதுவும் இல்லை என்று விளக்கம் சொல்லி வருகின்றனர்.

    அனுஷ்கா

    அனுஷ்கா

    ஆர்யா வீட்டுக்குப் போய் பிரியாணி சாப்பிட்ட இன்னொரு முக்கிய நடிகை அனுஷ்கா. இவரும் ஆர்யாவை வானளாவப் புகழ்ந்து வந்தார். உடனே ஆர்யாவுக்கு அனுஷ்காவை புது ஜோடியாக்கிவிட்டார்கள்.

    இப்போது நயன்தாரா மற்றும் அனுஷ்காவுடன் அவர் நடித்துவந்த படங்கள் முடிந்துவிட்டன.

    மறுப்பு

    மறுப்பு

    இப்போது நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து வசியப்படுத்துவதாக வந்த கிசுகிசுக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் ஆர்யா.

    எல்லாமே வதந்திதாங்க

    எல்லாமே வதந்திதாங்க

    நடிகைகளுடன் என்னை இணைத்து வரும் செய்திகள் எல்லாமே வதந்திகள்தான். அதில் உண்மை இல்லை. பொதுவாகவே நடிகைகளிடம் மட்டுமல்ல, நடிகர்களுடனும் நெருங்கிப் பழகுவேன்.

    கூப்பிட்டால் போவேன்

    கூப்பிட்டால் போவேன்

    நடிகைகளிடம் நான் வைத்திருப்பது வெறும் நட்பு மட்டும்தான். அதைத் தாண்டி ஒண்ணுமில்ல. என்னுடன் நடிக்கிற நடிகைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஆலோசனைகள் சொல்வேன். அவர்கள் விரும்பி சாப்பிட கூப்பிட்டால் போவேன்.

    வீட்டில் விசேஷமென்றால்...

    வீட்டில் விசேஷமென்றால்...

    அதே போல என் வீட்டில் விசேஷமென்றால் நண்பர்கள் அனைவரையும் - நடிகைகள் உள்பட - அனைவரையும் கூப்பிட்டு விருந்தளிப்பேன். இது எல்லாருமே செய்யறதுதானே..

    அனுஷ்காவுடன்...

    அனுஷ்காவுடன்...

    இதை வைத்து தவறாக பேசுகின்றனர். அனுஷ்கா, நயன்தாராவுடன் இணைத்து பேசப்பட்டேன். அதில் உண்மை இல்லை. நயன்தாராவுடன் நட்பாகத்தான் பழகுகிறேன். ஒரு நடிகையுடன் ஒரு படத்தில் நடிக்கும்போது பொதுவாக எழும் கிசுகிசுக்கள் இவை என்பது எனக்கும் தெரியும்," என்றார்.

    English summary
    Actor Arya says that he has only friendly relationship with co stars especially with actresses.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X