எல்லா பஞ்சாயத்தும் ஓவர்.. நிம்மதியா 100 கி.மீ., சைக்கிள் ஓட்டிய ஆர்யா.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: ஜெர்மனி வாழ் இலங்கை பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக நடிகர் ஆர்யா குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் நடிகர் ஆர்யா மீது எந்தவொரு தவறும் இல்லை என காவல் துறை தரப்பு மீண்டும் உறுதிபடுத்தியதை அடுத்து முழு நிம்மதி அடைந்திருக்கிறார் நடிகர் ஆர்யா.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக் கிழமையான இன்று 100 கி.மீ., தூரத்தை சைக்கிளில் கடந்து அசத்தி உள்ளார்.

அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் சார்பட்டா ஹீரோ ஷேர் செய்ய அதனை ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர்.

ஆர்யாவுக்கு தொடர்பு இல்லை

ஆர்யாவுக்கு தொடர்பு இல்லை

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணை நடிகர் ஆர்யா காதலிப்பது போல நடித்து பல லட்சம் ஏமாற்றி விட்டார் என கிளம்பிய பிரச்சனையில், நடிகர் ஆர்யா போல நடித்து ஏமாற்றியவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த பிறகும் குற்றப்பத்திரிகையில் ஆர்யாவின் பெயர் நீக்கப்படாமல் இருப்பதால், அவரையும் விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வழக்கறிஞர் வாதாடினார்.

பஞ்சாயத்து முடிந்தது

பஞ்சாயத்து முடிந்தது

ஆனால், இதில் நடிகர் ஆர்யாவுக்கு தொடர்பு இல்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் இருந்து ஆர்யாவின் பெயர் நீக்கப்பட்டு விட்டதாக்வும் போலீஸ் தரப்பு தெரிவித்து இந்த பிரச்சனையில் இருந்து ஆர்யாவை விடுவித்துள்ளது.

பஞ்சாயத்து முடிந்தது

பஞ்சாயத்து முடிந்தது

ஆனால், இதில் நடிகர் ஆர்யாவுக்கு தொடர்பு இல்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் இருந்து ஆர்யாவின் பெயர் நீக்கப்பட்டு விட்டதாக்வும் போலீஸ் தரப்பு தெரிவித்து இந்த பிரச்சனையில் இருந்து ஆர்யாவை விடுவித்துள்ளது.

100 கி.மீ.,

100 கி.மீ.,

தல அஜித் ரஷ்யாவில் 5000 கி.மீ., பைக் பயணம் மேற்கொண்ட நிலையில், நடிகர் ஆர்யா ஞாயிற்றுக் கிழமையான இன்று 100 கி.மீ., தன் நண்பர்களுடன் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ய சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் தீயாக பகிரப்பட்டு வருகின்றன.

மூன்றரை மணிநேரத்தில்

மூன்றரை மணிநேரத்தில்

சைக்கிளில் மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் ஒட்டிச் சென்ற நடிகர் ஆர்யா சுமார் 3 மணி நேரம் 26 நிமிடம் 44 நொடிகளில் 101 கி.மீ., சைக்கிள் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் 3,263 கிலோ கலோரிகள் குறைந்துள்ளதாகவும் அவர் வெளியிட்ட மீட்டர் சார்ட்டில் போடப்பட்டிருக்கிறது.

சார்பட்டா தந்த சக்சஸ்

சார்பட்டா தந்த சக்சஸ்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை தந்த மிகப்பெரிய சக்சஸ் காரணமாக நடிகர் ஆர்யாவின் சம்பளம் சுமார் 20 கோடி வரை ஜெட் வேகத்தில் உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்யாவின் கால்ஷீட்டுக்காக ஏகப்பட்ட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு காத்திருக்கின்றனர்.

ஆயுத பூஜைக்கு அரண்மனை 3

ஆயுத பூஜைக்கு அரண்மனை 3

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள அரண்மனை 3 திரைப்படம் வரும் ஆயுத பூஜைக்கே திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விஷால் உடன் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படமும் ரிலீசாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X