நயன்தாரா காதலன் நானில்லீங்கோ! - ஆர்யா

By Shankar

Nayanthara and Arya
சென்னை: நயன்தாராவுக்கும் எனக்கும் இடையே இருப்பது வெறும் நட்புதான்... காதல் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் ஆர்யா.

பிரபு தேவா - நயன்தாரா பிரிந்துவிட்டதால், இப்போது நயன்தாராவுடன் ஆர்யாவை இணைத்து கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து நல்ல தொடர்பில் உள்ளனர்.

பிரபுதேவாவைப் பிரிந்து சென்னை திரும்பிய நயன்தாராவை முதல் ஆளாக வரவேற்றவர் ஆர்யா. அவரது புதுவீட்டை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தவர் நயன்தான். நயன்தாராவை 'கேக்' வெட்ட வைத்து விருந்தே கொடுத்தார் ஆர்யா. அத்துடன் மீண்டும் நடிக்கும்படி அவர்தான் அறிவுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. புதுப்படங்களில் நயன்தாராவை அவர்தான் பரிந்துரைக்கிறாராம். முக்கியமாக அஜீத்துடன் தான் நடிக்கும் படத்தில் நயன்தாரா இடம்பெற அவர்தான் காரணம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இதுகுறித்து ஆர்யா கூறுகையில், "இதெல்லாம் ரொம்ப ஓவர்... நயன்தாரா திறமையான நடிகை. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஒன்றாக நடித்தோம். எங்களைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. நயன்தாரா எனக்கு நல்ல தோழிதான். காதலெல்லாம் கிடையாது.

புதுப்படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு நான் சிபாரிசு செய்வதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர்.

கதாநாயகிகளை தேர்வு செய்வது இயக்குனர்கள்தான். அதிலெல்லாம் நான் தலையிடுவதே இல்லை," என்றார்.

நெஜமாவா!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X