சினிமா மட்டும் போதுமா... கொஞ்சம் சைடு பிஸினசும் வேணும்!- இது ஆர்யா பாலிசி

By Shankar

சினிமா மட்டுமே போதும் என்று இருந்து விட்டால், வாய்ப்புகள் மங்கும் காலத்தில் அல்லாட வேண்டி வரும் என்ற கோடம்பாக்க வாழ்க்கைப் பாடத்தை இந்த இளம் வயதிலேயே தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார் ஆர்யா.

அதனால்தான் சினிமாவில் சம்பாதித்ததில் ஒரு பெரும் பகுதியை தனது வேறு வகையில் முதலீடு செய்து வருகிறார்.

Arya

அதில் ஒன்று ஹோட்டல் பிஸினஸ். அண்ணா நகரில் ஆரம்பித்த பிரியாணி ஓட்டலுக்கு சென்னையில் வேறு பகுதிகளிலும் கிளைகளை திறந்துள்ளார்.

அடுத்து அவர் கால்பதித்திருப்பது ரியல் எஸ்டேட்டில்.

அஜீத்துடன் இவர் நடித்த 'ஆரம்பம்' படத்திற்கு முதலில் இவருக்கு பேசப்பட்டது நான்கு கோடிதானாம். ஆனால் பின்னர் தன் கேரக்டருக்கு இது பத்தாது என ஆர்யா பிடிவாதம் பிடித்ததால் மேலும் ஒரு கோடி சம்பளம் தரப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்த பணத்தை அப்படியே கொண்டுபோய் கொச்சி அருகே பெரிய நிலப்பரப்பை வாங்கிப் போட்டுள்ளாராம்.

சில மாதங்களுக்கு முன் அவர் வாங்கிய இந்த நிலத்துக்கு இப்போது ஆறு மடங்கு விலை உயர்ந்துவிட்டதாம். இதைப் பார்த்து, ரொம்பவே குஷியாகிவிட்ட ஆர்யா, தொடர்ந்து நிலங்களைத் தேடி வருகிறாராம். கொச்சி பக்கத்தில் பலரும் ஆர்யாவின் சார்பில் வருவதாகக் கூறி நிலங்களுக்கு பேரம் பேசுகிறார்களாம்.

ஜம்ஷெட் சேத்திரகாட் எனும் ஆர்யாவின் சொந்த மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X