அஜித் பிறந்தநாளில் அஜித் டயலாக்கை இமிடேட் செய்த ஆர்யா.. கஜினிகாந்த் ட்ரெய்லர் ரிலீஸ்!
சென்னை : 'தல' அஜித்தின் 47-வது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. பல பகுதிகளிலும் அஜித் ரசிகர்கள் கேக் வெட்டியும், மக்கள் நலப் பணிகள் செய்தும் அஜித் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்யா, சாயிஷா சைகல், சதீஷ் ஆகியோர் நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் 'கஜினிகாந்த்' படத்தின் ட்ரெய்லர் நள்ளிரவு வெளியிடப்பட்டது. இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

'கஜினிகாந்த்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் 'தர்மத்தின் தலைவன்' ரஜினி கெட்டப்பில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆர்யா. இப்படத்தில் ஆர்யா ஞாபக மறதி வியாதி கொண்ட இளைஞராக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லரில் 'விவேகம்' படத்தில் அஜித் சொல்லும் டயலாக்கை இமிடேட் செய்திருக்கிறார் ஆர்யா. 'இந்த உலகமே உன்னை தோத்துட்ட தோத்துட்டனு சொன்னாலும்.. நெவர் எவர் கிவ் அப்' என அஜித் சொன்ன டயலாக்கை ஞாபக மறதியை தொடர்புபடுத்தி பேசியிருக்கிறார் ஆர்யா. அதனாலேயே இந்தப் படத்தின் ட்ரெய்லரை அஜித் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











