இதுவும் ஆர்யா நியூஸ் தான்... ஆனா, கமல் சம்பந்தப்பட்டது!
Recommended Video

சென்னை: இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிகர் ஆர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் ஷங்கர் - கமல் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இப்படத்தில் கமலுடன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தில் கமலுக்கு பேரனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அந்தக் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இந்தியன் 2வில் நடிப்பது தொடர்பாக ஆர்யாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்யா மட்டுமின்றி அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் என பாலிவுட் நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.
படப்பிடிப்புக்கான தேதிகள் முழுமையாக முடிவு செய்த பின்னர் தான், யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியவரும். இப்படத்திற்கு எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகிய மூவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











