வட சென்னையும், கிக் பாக்ஸிங்கும்.. புது மனைவி வந்த நேரம்.. ஆர்யா பக்கம் அதிர்ஷ்டக் காற்று!

Recommended Video

ஆர்யா அதிர்ஷ்டசாலி, சயீஷா மற்றும் அவரின் அம்மா போட்டுள்ள ட்வீட்- வீடியோ

சென்னை: எல்லாம் புதுப் பொண்டாட்டி வந்த நேரம் என்பார்கள். அந்த கதையாக மாறியுள்ளது ஆர்யாவின் லேட்டஸ்ட் திரை வெற்றி.

கடந்த சில படங்கள் சரி வர ஓடாத நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்து ரிலீஸ் ஆன வெற்றிப் படம் மகாமுனி. இதனை அடுத்து விரைவில் காப்பான் வெளியாகிறது. அடுத்து தனது மனைவி சாயிஷா உடன் இணைந்து டெடி படத்தில் நடித்துள்ள ஆர்யா, அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பா.ரஞ்சித்.

பா. ரஞ்சித்தின் அடுத்த படம்

பா. ரஞ்சித்தின் அடுத்த படம்

‘காலா' திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்றும், இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

பாக்ஸர் ஆர்யா

பாக்ஸர் ஆர்யா

ஆனால் இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். அதற்காக குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையை தயார் செய்திருக்கும் பா.ரஞ்சித் கார்த்தியின் கால் ஷீட் இல்லாத நிலையில் ஆர்யாவுக்கு அந்தக் கதையைக் கூறி அவரது சம்மதத்தையும் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

வட சென்னை கதை

வட சென்னை கதை

இதையடுத்து படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், குரங்கு பொம்மை படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் நிறுவனம், ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தமிழில் பாக்ஸிங்கை மையப் படுத்தி எம்.குமரன், மான் கராத்தே, பூலோகம், பத்ரி, இறுதிச் சுற்று என அனைத்துமே வெற்றி படங்கள். வட சென்னையை மையப்படுத்திய கதையில் பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன.

ராசியான வட சென்னை

ராசியான வட சென்னை

அதில் முக்கால் வாசி வெற்றிப் படங்களே. அதுமட்டும் இன்றி காலா, அட்டகத்தி, மெட்ராஸ் இந்த 3 படங்களுமே வட சென்னையின் மூலை முடுக்குகளில் எடுக்கப் பட்ட இயக்குநர் பா.ரஞ்சித்தின் வெற்றிப் படங்களே! ஆக மொத்தம் பா.ரஞ்சித்தின் வட சென்னை பார்முலாவுடன் பாக்ஸிங்கை தூவி ரசிகர்களை குஷிப் படுத்தும் என எதிர் பார்க்கலாம்.

மனைவியோட ராசி

மனைவியோட ராசி

அதை விடுங்க, ஆர்யாவுக்கு கிடைத்துள்ள லேட்டஸ்ட் வெற்றிக்கு புதுப் பொண்டாட்டி சாயிஷா வந்த அதிர்ஷ்டம்தான் காரணம் என்று பேசிக் கொள்கிறார்களாம். எப்படி இருந்தா என்னா.. சந்தோஷம் தாங்க முக்கியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X