என் இமேஜை இப்படி டேமேஜ் பண்றாங்களே: புலம்பித் தள்ளும் ஆர்யா

By Siva

சென்னை: நான் நடிகைகளுடன் பேசினாலே அதற்கு பல அர்த்தம் எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்வேன் என்று நடிகர் ஆர்யா பாவம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

நடிகர் ஆர்யா படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் ரொம்ப ஜாலியாக இருப்பார். சக நடிககைள நக்கல் அடிப்பது, கலாய்ப்பதில் மன்னன் என்று பெயர் எடுத்துள்ளார். மேலும் நடிகைகளுக்கு ஆர்யா கொடுக்கும் பிரியாணி விருந்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தன்னை பற்றி கோலிவுட்டில் பரவும் வதந்திகளால் ஆர்யா கவலை அடைந்துள்ளார்.

பிக்கப்பா?

பிக்கப்பா?

படப்பிடிப்பில் நடிகைகளுடன் சும்மா பேசினால் உடனே ஆர்யா கடலை போடுகிறார், மடக்கிவிட்டார் என்கிறார்கள். ஆர்யா எப்படி பிக் ஆப் பண்ணுகிறார் என்றே தெரியவில்லை மனிதர் கமுக்கமாக வேலை பார்க்கிறார் என்று அவரை கிண்டல் செய்கிறார்கள்.

பிரியாணி விருந்து

பிரியாணி விருந்து

ஆர்யா தன்னுடன் நன்கு பழகிய நடிகைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று பிரியாணி விருந்து கொடுக்கிறார். அவ்வாறு அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றால் ஆர்யா அந்த நடிகையை காதலிக்கிறார் என்கிறார்கள். இப்படி அவரை பலர் பல வாரியாக பேசுவது அவரை கவலை அடைய வைத்துள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

நான் நயன்தாராவை காதலிக்கவே இல்லை என்று ஆர்யாவும் கதறிக் கொண்டு தான் இருக்கிறார். அதே போல் நயன்தாரா தான் ஆர்யாவை காதலிக்கவில்லை சிங்கிளாகத் தான் இருக்கிறேன் என்று மேடை போட்டுக் கூறாத குறையாக கூறி வருகிறார். ஆனாலும் ஆர்யாவும், நயன்தாராவும் காதலர்கள் என்ற பேச்சு மட்டும் ஓயவில்லை.

டாப்ஸி

டாப்ஸி

ஆரம்பம் படத்தில் நடித்தபோது ஆர்யாவும், டாப்ஸியும் நெருக்கமாகிவிட்டார்களாம். அதனால் ஆர்யா டாப்ஸிக்கு பரிந்துரை செய்வதாக செய்திகள் வெளியாகின. டாப்ஸியை நான் ஏதோ மீகாமன் மற்றும் புறம்போக்கு படத்திற்கு பரிந்துரை செய்ததாக் கூறுகிறார்கள். ஆனால் புறம்போக்கு படத்தின் நாயகி கார்த்திகா. மீகாமனுக்கு வேறு ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் என்னை இப்படி பேசுவது நியாயமா என்று கேட்கிறார் ஆர்யா.

இமேஜ் டேமேஜ்

இமேஜ் டேமேஜ்

என்னை பற்றி வரும் வதந்திகள் கூட ஒரு பப்ளிசிட்டி என்று நினைத்து தான் இத்தனை நாட்கள் சும்மா விட்டுவிட்டேன். ஆனால் போகிற போக்கை பார்த்தால் என் இமேஜே டேமேஜ் ஆகிவிடும் போல் உள்ளது என்று புலம்புகிறார் ஆர்யா. அதனால் தான் வெட்டி பேச்சு பேசும் கோலிவுட் ஆசாமிகளிடம் போய் வதந்தியை பரப்புவதை விட்டுவிட்டு உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கூறி வருகிறாராம் ஆர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X