ஆர்யா- கிருஷ்ணாவை இயக்கும் விஷ்ணுவர்தன்

By Shankar

ஏதாவது ஒரு விதத்தில் தன் படங்களில் ஆர்யா இருந்தால் அதிர்ஷ்டம் என்ற நினைப்பு இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு.

முதல் படமான அறிந்தும் அறியாமலும் தொடங்கி, ஆரம்பம் வரை தான் இயக்கிய 5 படங்களில் நான்கில் ஆர்யா இருக்கும்படி பார்த்துக் கொண்டவர் விஷ்ணுவர்தன்.

அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் என நான்கு படங்களில் ஆர்யாதான் ஹீரோ.

Arya - Krishna to play lead role in Vishnuvardhan's next

இப்போது அடுத்து தான் இயக்கும் புதிய படத்திலும் நாயகனாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இன்னொரு ஹீரோவாக விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா நடிக்கிறார். அண்ணன் இயக்கத்தில் தம்பி நடிப்பது இதுதான் முதல் முறை.

அஜித், ஆர்யா என்று ஸ்டார் ஹீரோக்களை இயக்கும் நீங்கள் ஏன் உங்கள் தம்பியை இயக்கவில்லை என்று விஷ்ணுவர்தனிடம் பல முறை கேட்கப்பட்டது. பொருத்தமான ஸ்க்ரிப்டுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லி வந்த விஷ்ணுவர்தன், இப்போதுதான் அப்படியொரு ஸ்க்ரிப்ட் வந்திருப்பதாகக் கூறி கிருஷ்ணாவை அழைத்துள்ளார்.

'வானவராயன் வல்லவராயன்' படத்தில் நடிக்கும் கிருஷ்ணாவுக்கு, அண்ணனிடம் இருந்து வந்துள்ள இந்த அழைப்பு உற்சாகத்தைத் தந்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X