'டார்லிங்' வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய விஷால்: பப்ளிக்கா அசிங்கப்படுத்திய ஆர்யா
Recommended Video

சென்னை: ட்விட்டரில் தனது காதலியான வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய விஷாலை ஆர்யா கலாய்த்துள்ளார்.
நடிகர் விஷாலும், வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக பலகாலமாக கிசுகிசுக்கப்படுகிறது. காதலை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களுக்கு இடையே இருப்பது வெறும் நட்பு இல்லை என்பதை நிரூபிக்கிறது.
இந்நிலையில் விஷால் வரலட்சுமியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
விஷால்
சண்டக்கோழி 2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரலட்சுமி சரத்குமார் தனது பகுதியை நடித்து முடித்துவிட்டார். கிளைமாக்ஸ் சண்டை அருமை. ரொம்ப நன்றி டார்லிங் வரு. மிகவும் ப்ரொபஷனலான நடிகை. அக்டோபர் 18ம் தேதியை எதிர்பார்க்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று ட்வீட்டியுள்ளார் விஷால்.

வரலட்சுமி
விஷால் வரலட்சுமியை காதலிப்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர் தான் தனது உயிர்த்துடிப்பு என்று முன்பு கூறினார். தற்போது அவர் ட்வீட்டியுள்ளதை பார்த்து காதல் இல்லாமலா இப்படி பாராட்டுகிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.
ஆர்யா
விஷாலின் ட்வீட்டை பார்த்த நடிகர் ஆர்யாவோ, மச்சான் இதை நீ டைப் செய்தியா இல்லை வருவா என்று கேட்டு கலாய்த்துள்ளார்.
கீர்த்தி
சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் என்று கீர்த்தி சுரேஷ் பயப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த நெட்டிசன் வேறு கொளுத்திப் போடுகிறாரே.


Click it and Unblock the Notifications











