ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை!

சென்னை : நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியாகும் சமீபத்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக அரண்மனை3 வெளியாக இருக்க பிரபல இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் நடிக்க இருக்கும் ஆர்யாவுக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

தொடர் தோல்வி மற்றும் சுமாரான படங்களை கொடுத்து வந்த ஆர்யா இப்பொழுது கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிற அதேசமயம் முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்திருந்த சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்து மிரட்டி இருந்தார்.

நேரடியாக ஓ டி டி தளத்தில்

நேரடியாக ஓ டி டி தளத்தில்

இதுவரை சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த ஆர்யா சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வெறித்தனமான குத்துச்சண்டை வீரராக நடித்து மிரட்டி இருக்க இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் எதிர்பாராதவிதமாக நேரடியாக ஓ டி டி தளத்தில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

நெற்றிக்கண் பட இயக்குனரின்

நெற்றிக்கண் பட இயக்குனரின்

சார் பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போயிருக்க ஆர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்களை காண அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா பேயாக மிரட்ட இருக்கும் அரண்மனை 3 வரும் ஆயுதபூஜைக்கு ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் ஆர்யா அடுத்ததாக நெற்றிக்கண் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரில்லர் வெப்சீரிஸ்

த்ரில்லர் வெப்சீரிஸ்

நடிகை நயன்தாரா முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்த நெற்றிக்கண் திரைப்படம் மிகச் சிறந்த த்ரில்லர் படமாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி இருந்தார். பிரபல கொரியன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான நெற்றிக்கண் திரைப்படத்தை தொடர்ந்து மிலிந்த் ராவ் அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த வெப்சீரிஸ் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஷாமிக் தாஸ்குப்தாவின் யாலி டிஜிட்டல் கிரியேஷன்ஸின் 2018 கிராஃபிக் நாவலான The Village என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளது.

சீரியல் நடிகை வாணி போஜன்

சீரியல் நடிகை வாணி போஜன்

இதில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்க கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பசுபதி மற்றும் பிரகாஷ்பெலவாடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் . இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாக உள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X