ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஆர்யாவாகவே நடிக்கும் ‘ஆர்யா’!

சென்னை: தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்தாலும் இரட்டை நாயகர்கள் கொண்ட படங்களிலும் மறுக்காமல் நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. இந்நிலையில் தற்போது கவுரவத் தோற்றத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறாராம்.

ஈகோ இல்லாமல் பழகும் இளம் தலைமுறை நடிகர்களில் ஆர்யா முதன்மையானவர் என்றால் மிகையாகாது. இதற்கு நல்ல உதாரணமாக சமீபத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துள்ள அமரகாவியம் பட விழாவைக் கூறலாம். ஏனேனில் தங்களது சொந்தப்பட விழாக்களுக்கே கூட வராத சில நடிகைகள் கூட அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.

ஆர்யா, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் ஈகோ இல்லாத இந்த மனோநிலையால் தான் தமிழில் மல்டி ஹீரோ படங்கள் ஒன்றிரண்டாவது வெளியாகின்றன என்கின்றனர் திரைத் துறையினர்.

கவுரவ தோற்றம்...

கவுரவ தோற்றம்...

விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமா ஆர்யா, தொடர்ந்து ஹீரோவாக மட்டுமல்லாமல் மாயக்கண்ணாடி, சிவா மனசுல சக்தி, காதல் சொல்ல வந்தேன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் கவுரவ தோற்றத்திலும் வந்து போனார்.

3 படத்தில்...

3 படத்தில்...

இந்நிலையில், தற்போது மீகாமகன், யாட்சன் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திலும், சுசீந்திரன் இயக்கதில் விஷ்ணு நாயகனாக நடிக்கும் ஜீவா படத்திலும், ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறாராம்.

பார்த்திபன் படத்தில்...

பார்த்திபன் படத்தில்...

தனது படம் தொடர்பாக ஆர்யாவிடம் போனில் தொடர்பு கொண்ட பார்த்திபன், எப்போது கால்சீட் கிடைக்கும் எனக் கேட்டதற்கு, ‘எப்ப வரணும்னு சொல்லுங்க அப்ப வந்திடுறேன்' எனக் கூறினாராம் ஆர்யா. சொன்னது போலவே செய்தும் காட்டினாராம்.

சம்பளமே வேணாம்..

சம்பளமே வேணாம்..

அதையடுத்து தற்போது விஷ்ணு நடிப்பில் ஜீவா என்ற கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையை இயக்கி வரும் சுசீந்திரன், தனது படத்தில் ஒரு ரோலில் சிறிய ரோலில் ஒரு சீனில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் தயக்கத்துடன் கேட்டாராம். அதற்கு, தயக்கம் வேண்டாம், தைரியமாக கேளுங்கள். ஒரு நாள்தானே சம்பளமே வாங்காமல் நடிததுத்தருகிறேன் எனறு சொல்லி விட்டாராம்.

ஆலோசனை தேவை...

ஆலோசனை தேவை...

அதனைத் தொடர்ந்து தனது நண்பர்களில் ஒருவரான ஜெயம்ரவி சிக்ஸ்பேக் பயிற்சியாளராக நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்திலும் நடிக்கிறாராம் ஆர்யா. அப்படத்தில் ஜெயம் ரவியிடன் ஆலோசனை பெற வரும் ஆர்யா, நடிகராகவே நடிப்பது குறிப்பிடத்தக்கது.

டைரக்டர்களின் செல்லம்...

டைரக்டர்களின் செல்லம்...

இவ்வாறு தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் கவுரவ தோற்றத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பது இதுவே முதல் முறை என திரை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, இப்படியாக நட்புக்காக பல படங்களில நடித்து வருவதின் மூலம் பல டைரக்டர்களின் நட்பையும் சம்பாதித்து வருகிறாராம் ஆர்யா.

வாவ்யா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X