அஜீத்தின் 'தில்'லை பார்த்து மெய் சிலிர்த்துப் போயிருச்சு பாஸ்....ஆர்யா

By Siva

சென்னை: நடிகர் ஆர்யா ஆரம்பம் ஹீரோ அஜீத் குமார் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அஜீத் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் கடந்த 31ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்யா அஜீத் குமார் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அஜீத் தான் பிடிக்கும்

அஜீத் தான் பிடிக்கும்

அஜீத் குமார் எனக்கு எப்பொழுதும் பிடித்த நடிகர். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ரசிகன். ஆரம்பம் படப்பிடிப்பின்போது என்னை அவர் தன் தம்பியை போன்று பார்த்துக் கொண்டார். அதே சமயம் ஆரம்பம் படம் மூலம் அஜீத் என்ற நல்ல நண்பர் கிடைத்துள்ளார் என்றார் ஆர்யா.

அஜீத்தின் தில்

அஜீத்தின் தில்

ஆரம்பம் படப்பிடிப்பில் அஜீத்துக்கு காயம் ஏற்பட்டபோது படக்குழுவினர் ஆடிப்போயிட்டோம். அவர் டூப் போடாமல் நடித்தார். அவரின் தில் மெய்சிலிர்க்க வைத்தது என்று ஆர்யா தெரிவித்தார்.

பாராட்டு

பாராட்டு

ஆரம்பம் படத்தில் எனது நடிப்பை அஜீத் பாராட்டியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. படத்தில் தனக்கு இணையாக வேறு ஒரு ஹீரோ நடிப்பதை எந்த ஒரு சூப்பர் ஸ்டாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அஜீத் ஏற்றுக் கொண்டார் என்று ஆர்யா கூறினார்.

ஃபுல் சப்போர்ட்

ஃபுல் சப்போர்ட்

அஜீத் எனக்கு ஃபுல் சப்போர்ட் செய்தார். படத்தின் விளம்பரத்தில் அவர் பெயரோடு எனது பெயரும் வரும்படி செய்தார். அது தான் அஜீத் என்று நெகிழ்ந்தார் ஆர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X