மக்கள் தியேட்டருக்கு வராங்க.. பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சிவகார்த்திகேயனை வாழ்த்திய ஆர்யா!

சென்னை: மீண்டும் மக்களை தியேட்டருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வரவழைத்துள்ளதை பார்த்து நடிகர் ஆர்யா பாராட்டி உள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் கடந்த சனிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கோலமாவு கோகிலா போலவே இந்த படத்திலும் டார்க் காமெடியில் இயக்குநர் நெல்சன் கலக்க மக்கள் கூட்டம் தியேட்டர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளது.

அப்போ மாஸ்டர் இப்போ டாக்டர்

அப்போ மாஸ்டர் இப்போ டாக்டர்

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைத்தது. இந்நிலையில், அடுத்த லாக்டவுன் முடிந்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மக்களை தியேட்டருக்கு வரவழைத்துள்ளது.

பல படங்கள் தயங்கின

பல படங்கள் தயங்கின

கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர், வலிமை உள்ளிட்ட பல பெரிய படங்களே இந்த ஆண்டு ரிலீஸ் ஆனால், படத்தின் வசூல் பாதிக்கும் என தயங்கி அடுத்த ஆண்டு ரிலீஸை மாற்றி வைத்த நிலையில், கெத்தாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வெற்றிநடை போட்டு வருகிறது.

பாராட்டிய ஆர்யா

பாராட்டிய ஆர்யா

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மக்களை மீண்டும் திரையரங்குக்கு கொண்டு வந்ததை அறிந்த நடிகர் ஆர்யா சிவகார்த்திகேயனையும் டாக்டர் படக்குழுவையும் மனதார பாராட்டி உள்ளார். மேலும், இந்த நேரத்திற்கு இப்படி ரசிகர்களை சிரிக்க வைக்கும் படம் தான் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நன்றி

சிவகார்த்திகேயன் நன்றி

நடிகர் ஆர்யாவின் ட்வீட்டை பார்த்து சந்தோஷபட்ட சிவகார்த்திகேயன் ஆர்யாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரண்மனை 3 வருது

அரண்மனை 3 வருது

சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் மூலம் திரையரங்குகளில் மீண்டும் மக்கள் கூட்டத்தை வரவழைத்துள்ளது நடிகர் ஆர்யாவின் ஆயுத பூஜை ரிலீஸ் திரைப்படமான அரண்மனை 3 படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. காமெடி பேய் திரைப்படமான அரண்மனை 3க்கும் இதே போல ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

மேலும், தீபாவளி பண்டிகைக்கு ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படமும் ரிலீசாக உள்ள நிலையில், நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை போல அடுத்தடுத்து வெற்றிகளை கொண்டாட காத்திருக்கிறார். அதே போல சிவகார்த்திகேயனும் அயலான் ரிலீசுக்காக வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X