மலையாளப் படத்தில் ஃபகத் பாசிலுக்கு பதில் ஆர்யா!

By Mayura Akilan

மலையாளப்படமான டபுள் பேரலில் ஃபகத் பாசிலுக்குப் பதிலாக ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2013ம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'ஆமென்' என்ற மலையாளப் படத்தை இயக்கியவர் லிஜா ஜோஸ் பெல்லிசேரி. இந்தப் படத்தில் ஃபகத் பாசில், இந்திரஜித், சுவாதி மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

அடுத்து இவர் இயக்க உள்ள படம் 'டபுள் பேரல் (இரட்டகுழல்)'. மலையாளத் திரையுலகில் உள்ள சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.

பிருத்விராஜ், இந்திரஜித், ஃபகத் பாசில், பினீஷ், இஷா ஷெர்வானி, சுவாதி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

விலகிய ஃபகத்

விலகிய ஃபகத்

அதில் தற்போது ஒரு மாற்றம், படத்தில் நடிப்பதாக இருந்த ஃபகத் பாசில் அதிலிருந்து விலகிவிட்டாராம். விலகலுக்கான காரணம் பற்றி தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

ஆர்யா உள்ளே

ஆர்யா உள்ளே

இதனிடையே ஃபகத் பாசிலுக்கு பதிலாக, தமிழ் நடிகரான ஆர்யா அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டபுள் பேரல்

டபுள் பேரல்

'டபுள் பேரல்' படம் மலையாளத் திரையுலகில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ள படம் என்ற பேச்சு இப்போதே எழுந்துள்ளது.

தமிழிலும் பிஸி

தமிழிலும் பிஸி

தற்போது தமிழிலும் மிகவும் பிஸியாக உள்ள ஆர்யா, மலையாளத்தில் உருவாக உள்ள ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க இருக்கிறார்.

மலையாள தாய்மொழி

மலையாள தாய்மொழி

ஆர்யாவின் தாய்மொழி மலையாளம்தான். ஆர்யா ஏற்கெனவே 'இனம்' படத்தால் சர்ச்சையைக் கிளப்பிய சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி' என்ற மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து ஆர்யா மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X