ஆயுத பூஜைக்கு வெளியாகும் ஆர்யாவின் அரண்மனை 3!
சென்னை : கலகலப்பான காமெடி திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனர் சுந்தர் சி பிறகு தொடர்ச்சியாக பேய் படங்களை இயக்கி அதிலும் வெற்றி கண்டு வருகிறார்.
இந்த வகையில் உருவான அரண்மனை ஒன்று மற்றும் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக இப்போது மூன்றாவது பாகம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் ஆர்யா ராஷி கண்ணா,சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
2 கோடி ரூபாய் செலவில் க்ளைமேக்ஸ் காட்சி மட்டும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட நிலையில் அரண்மனை 3 ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

முதல் முறையாக பேய் படத்தை
இயக்குனர் சுந்தர் சியின் திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை என்றுமே சிரிப்புக்கு பஞ்சமில்லாத கலகலப்பான திரைப்படங்களாக உருவாகி வந்தது. ரஜினி கமல் ஹாசன் விஜய் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வந்த சுந்தர் சி ஒரு கட்டத்தில் நடிகராகவும் களமிறங்கி பட்டையை கிளப்பினார். நடிகர் ஆன பிறகும் திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்திவரும் சுந்தர் சி 2014ஆம் ஆண்டு அரண்மனை என்ற பேய் படத்தை இயக்கி இருந்தார். இதுவரை காமெடி படங்களுக்கு பெயர் போன சுந்தர் சி முதல் முறையாக பேய் படத்தை இயக்குவதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது ஹன்சிகா மோத்வானி, வினய்,ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம்,கோவை சரளா, மனோ பாலா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்க படம் வேற லெவல் ஹிட்டடித்தது. இதன் மூலம் காமெடி படங்கள் மட்டும் அல்லாமல் பேய் படங்களையும் இயக்க முடியும் என சுந்தர் சி நிரூபித்து இருந்தார் .

அரண்மனை 3
அரண்மனை படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இரண்டு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு வெளியானது சுந்தர் சி ஹன்சிகா மோத்வானி சித்தார்த் த்ரிஷா பூனம் பாஜ்வா கோவை சரளா சூரி மனோபாலா ராதாரவி என முற்றிலும் புதிய டீமுடன் களம் இறங்கிய அரண்மனை 2ம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இப்போது புதிய வழக்கம் ஒன்று உருவாகி வருகிறது அதன்படி ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அதன் தொடர்ச்சியை இரண்டாவது, மூன்றாவது பாகம் என உருவாவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் அரண்மனை 2 பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில் அதன் மூன்றாவது பாகமும் வெளியாகிறது என்று அறிவித்திருந்தார். அதன்படி முற்றிலும் புதிய நட்சத்திர பட்டாளங்கள் உடன் அரண்மனை 3ஆம் பாகத்தை சுந்தர் சி இப்பொழுது இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். நளினி, மனோபாலா, யோகி பாபு,விவேக் என பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரண்மனை முதல் இரண்டு பாகங்களைப் போலவே இந்த திரைப்படமும் கலகலப்பான காமெடி நிறைந்த பேய் படமாக உருவாகி உள்ளது. அரண்மனை 1ன் தொடர்ச்சியாக எப்படி அரண்மனை 2 வெளியானதோ அதேபோல அரண்மனை 2 தொடர்ச்சியாக அரண்மனை3 இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

2 கோடியில் பிரம்மாண்ட செட்
தொடர்ந்து சுமாரான ஹிட்டுகளை கொடுத்து வந்த நடிகர் ஆர்யாவின் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக முதல் முறையாக நடிக்க பா ரஞ்சித் இயக்கியிருந்தார். செல்லும் இடமெல்லாம் பாசிட்டிவான விமர்சனங்கள் இப்படத்தைப் பற்றிய தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்யா இந்த மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளதால் அடுத்தடுத்த கதைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த வகையில் இப்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3ல் அதிரடியாக பேயாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அரண்மனை3 படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட் அமைத்து சமீபத்தில் எடுக்கப்பட்டது இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக படத்தையும் மிகப்பிரமாண்டமாக சுந்தர் சி இயக்கி உள்ளதாக தெரிகிறது. குஜராத், ராஜ்கோட், சென்னை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிந்தது. சென்ற மாதம் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. விரைவில் அனைத்து பாடல்களும் வெளியாக இருக்க நேற்று அரண்மனை 3ல் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி பட்டையை கிளப்பியது. அரண்மனை 3 முதல் சிங்கிள் ட்ராக் ரடடபட என்ற பாடல் தற்பொழுது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குனர் சுந்தர் சியின் திரைப்படங்களுக்கு ஹிப்ஹாப் ஆதி தொடர்ந்து இசை அமைத்து வந்தார் இப்பொழுது அவர் நடிகராக பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அரண்மனை 3க்கு இசையமைப்பாளர் சி சத்யா இசை அமைத்து உள்ளார். சுந்தர் சி யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆயுதபூஜை தினத்தில் ரிலீஸ்
விரைவில் அரண்மனை 3ன் டீசர் மற்றும் டிரைலர் வெளியாக இருக்க இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல திரைப்படங்கள் தேக்கி வைக்கப்பட்டு இப்போது ஒவ்வொன்றாக திரையரங்கில் வெளியாகி வருகிறது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலான பண்டிகை நாட்களில் குறிவைத்து ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ஆர்யாவின் அரண்மனை 3 ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆயுதபூஜை தினத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்


Click it and Unblock the Notifications











