ஆர்யா தம்பி சத்யா நடிக்கும் எட்டுதிக்கும் மதயானை

தென்காசி: தென்காசி அருகே நடிகர் ஆரியாவின் தம்பி சத்யா நடிக்கும் "எட்டுதிக்கும் மதயானை' படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா நடந்தது

ஆர்யாவைத் தொடர்ந்து இப்போது அவரது தம்பியும் சினிமாவுக்கு வந்து விட்டர். ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ள சத்யா தற்போது எட்டுத்திக்கும் மத யானை என்ற படத்தில் நடிக்கிறார்.

தென்காசியை அடுத்த சுந்தரபாண்டியபுரத்தில்சி எட்டுத்திக்கும் மதயானை சினிமா படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா நடந்தது.

நெல்லை கண்ணன் பங்கேற்பு

நெல்லை கண்ணன் பங்கேற்பு

விழாவில் படத்தின் இயக்குநர் தங்கசாமி, பேச்சாளர் நெல்லை கண்ணன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., சுப்பிரமணியன், கதாநாயகன் நடிகர் ஆரியாவின் தம்பி சத்யா ஆகியோர் பங்கேற்றனர்.

அறிமுகமாகும் ஸ்ரீமுகி

அறிமுகமாகும் ஸ்ரீமுகி

இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீமுகி நடிக்கிறார். ராட்டினம் படத்தின் கதாநாயகன் லகுபரன், "ஜூனியர் பவர் ஸ்டார்' என அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் உட்பட பலர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவங்கினர்.

ராட்டினம் பிக்சர்ஸ்

ராட்டினம் பிக்சர்ஸ்

படத்தை இயக்குநர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராட்டினம் பிச்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு நேற்று பாடல் காட்சி ஒளிப்பதிவுடன் துவங்கியது.

ராட்டினம் வெற்றியைத் தொடர்ந்து

ராட்டினம் வெற்றியைத் தொடர்ந்து

இந்த படத்தை பற்றி படத்தின் இயக்குநர் தங்கசாமி கூறுகையில்: "எனது ராட்டினம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்குகிறேன். புத்தகம் படத்தில் நடித்த சத்யா கதாநாயகனாகவும், ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீமுகி (புதுமுகம்) கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் லகுபரன்

முக்கிய வேடத்தில் லகுபரன்

முக்கிய கதாபாத்திரத்தில் ராட்டினம் கதாநாயகன் லகுபரன் நடிக்கிறார். சாம்ஆண்டர்சன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெய் ஒளிப்பதிவு செய்கிறார், ராட்டினம் படத்திற்கு இசையமைத்த மனோ ரமேஷன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். பாடலுக்கு நடனத்தை கேசவன் அமைத்திருக்கிறார்.

தனி மனிதப் பிரச்சினைதான் கதை

தனி மனிதப் பிரச்சினைதான் கதை

இந்தபடம் ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் பிரச்னையை எதிர்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தின் படம் இதில் காதல், ஆக்ஷன் போன்றவற்றை கலந்து ஒரு எமோஷனல் படமாக திருநெல்வேலியை மையமாக வைத்து எடுக்கவுள்ளோம்.

கண்டிப்பாக பேசப்படும்

கண்டிப்பாக பேசப்படும்

இப்படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும். இப்படத்தில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இப்படத்தை இன்று சுந்தரபாண்டியபுரத்தில் பாடல் காட்சி ஒளிப்பதிவுடன் துவங்கி இன்னும் 50 நாட்களுக்கு திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எடுக்கவுள்ளோம் என கூறினார்.

சத்யாவுக்கு 3வது படம்

சத்யாவுக்கு 3வது படம்

படத்தின் கதாநாயகன் சத்யா கூறுகையில் நான் இதுவரை புத்தகம், காதல் டூ கல்யாணம் ஆகிய படங்களில் நடித்துள்ளேன். இதில் காதல் டூ கல்யாணம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. புத்தகம் படத்தில் என் நடிப்பை பார்த்து தங்கசாமி சார் என்னை இந்த படத்திற்கு நடிக்க அழைத்தார்கள். ஏற்கனவே ராட்டினம் படத்தை பார்த்து இவர் இயக்கத்தில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. அவரே என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்ததில் மிகுந்த சந்தோஷம் அடைகிறேன். இந்த படம் நல்லா வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதில் இன்று பாடல் காட்சியை ஒளிப்பதிவு செய்யவுள்ளோம். பாடலை கேட்டேன் ராட்டினம் படத்தின் பாடலை போன்று பெரிய ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

ஸ்ரீமுகிக்கு முதல் படம்

ஸ்ரீமுகிக்கு முதல் படம்

படத்தின் கதாநாயகி ஸ்ரீமுகி கூறுகையில் இது எனக்கு முதல் படம். முதல் படமே நல்ல கதையாக அமைந்துள்ளது. மேலும் முதல் நாள் படப்பிடிப்பும் பாடல் காட்சியாக அமைந்ததில் எனக்கு சந்தோஷம். தங்கசாமி சார் படத்துல நடிக்கறதுல எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது என கொஞ்சும் தமிழில் கூறினார்.

குளத்துக்கரையில் முதல் பாடல்

குளத்துக்கரையில் முதல் பாடல்

படத்தில் முதல் காட்சியே பாடலுக்கு கதாநாயகன்மற்றும் சாம் ஆண்டர்சன் ஆடுவது போன்ற காட்சி சுந்தரபாண்டியபுரம்குளத்துக்கரையில் கிரேனில் கேமராவை பொருத்தி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பை காண அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

50 நாள் படப்பிடிப்பு

50 நாள் படப்பிடிப்பு

படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் தென்காசி, குற்றாலம், திருநெல்வேலி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X