புதிய படத்தில் ஒப்பந்தமான நடிகர் ஆர்யா... ஹீரோயின் யாருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்தா சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது.
1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை போட்டியை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

அரண்மனை 3 படம்
இதில் அக்காலத்து பாக்ஸராக நடித்திருந்தார் ஆர்யா. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது உடலை வருத்திக் கொண்டு நடிகர் ஆர்யா நடித்ததாக பலரும் அவரை புகழ்ந்தனர். அதனை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் கடைசியாக அரண்மனை 3 படம் வெளியானது.

எனிமி ட்ரெய்லர்..
இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அவன் இவன் படத்திற்கு பிறகு நடிகர் விஷாலுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஆர்யா. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது.

புதிய படத்தின் பூஜை
இந்த ட்ரைலரும் சமூக வலைதளங்களில் வைரலானது. எனிமி படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து 'டெடி' படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

ஹீரோயின் ஐஸ்வர்ய லக்ஷ்மி
இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் கதாநாயகியாக 'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார்.

இமான் இசை
மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











