மனுஷனாய்யா நீ: ஆர்யாவை பார்த்து கேட்கும் ரசிகர்கள்
சென்னை: ஆர்யா தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து தான் மனுஷனாய்யா என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.
ஆர்யா சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொள்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் பாரீஸில் நடக்கவிருக்கும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்.
அதற்காக அவர் செமயாக ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறார்.
ஆர்யா
சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ள ஆர்யா தான் ஒர்க்அவுட் செய்தபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மனிதர் உடம்பை பயங்கரமாக, மரணமாக வைத்துள்ளார்.
சதீஷ்
ஆகஸ்ட் மாதம் நடக்கும் போட்டிக்காக தயாராகும் ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த நடிகர் சதீஷோ, எங்க வீட்டு மாப்பிள்ளை 2-க்கு ரெடியாகுவது மாதிரி இருக்கே என்று கலாய்த்துள்ளார்.
ரசிகர்கள்
ஆர்யாவின் ஒர்க்அவுட் வீடியோவை பார்த்துவிட்டு மனுஷனா நீங்க என்று ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். பாரீஸில் நடக்கும் போட்டியில் ஆர்யா வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர்.
மகிழ்ச்சி
ஆர்யாவின் வீடியோவை பார்த்த ரசிகைகள் தற்போது இப்படித் தான் ஃபீல் பண்ணுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











