சார்பட்டா பரம்பரை தந்த சக்சஸ்.. உச்சத்துக்கு சென்ற ஆர்யாவின் மார்க்கெட்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான சார்பட்ட பரம்பரை நடிகர் ஆர்யாவுக்கு மிகப்பெரிய சக்சஸை பெற்றுத் தந்துள்ளது.

Recommended Video

வீட்டுக்கு போனா கைய தூக்க முடியாது | Sarpatta | Actor Arya Exclusive | Filmibeat Tamil

நடிகர் ஆர்யாவுக்கு மட்டுமின்றி அந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் இந்தியளவில் வாய்ப்புகள் குவிய காத்திருக்கிறது.

இந்நிலையில், சார்பட்ட பரம்பரை படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் கிடுகிடுவென உச்சத்திற்கு சென்றுள்ளதாம்.

சார்பட்டா சக்சஸ்

சார்பட்டா சக்சஸ்

டெடி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படமும் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது. வடசென்னை பாக்சிங்கை மையமாக உருவான இந்த படத்தின் மேக்கிங் இந்தியளவில் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய சக்சஸ் அடைந்தது.

கபிலன், வேம்புலி, வாத்தியார்

கபிலன், வேம்புலி, வாத்தியார்

சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. கபிலன், வேம்புலி, ரங்கன் வாத்தியார், டான்சிங் ரோஸ், டாடி, மாரியம்மாள், வெற்றி என சொல்லிக் கொண்டே போகலாம். ஆர்யாவுக்கு மட்டுமின்றி இந்த படத்தில் நடித்த பலருக்கும் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கித் தந்துள்ளது.

அரண்மனை 3

அரண்மனை 3

சார்பட்டா பரம்பரை படம் தந்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள பேய் படமான அரண்மனை 3 வெளியாக காத்திருக்கிறது. காஞ்சனா படங்களை விட ஆர்யாவின் அரண்மனை 3 பேய்த் தனமான வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த படத்திற்கும் பெரிய கிராக்கி உருவாகி இருக்கிறது.

எனிமி

எனிமி

அரண்மனை 3 படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் ஆர்யா விஷாலின் எனிமி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எப்படியும் படம் டபுள் ஹீரோ சப்ஜெக்டாகத் தான் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சார்பட்டா சக்சஸ் ஆர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது திரைத்துறையினரின் கவனத்தை திருப்பி இருக்கிறது.

நெற்றிக்கண் இயக்குநருடன்

நெற்றிக்கண் இயக்குநருடன்

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் தான் சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இந்நிலையில், அவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள ஒரு வெப்சீரிஸிலும் நடிகர் ஆர்யா கமீட் ஆகி உள்ளார்.

சூர்யா தயாரிப்பில்

சூர்யா தயாரிப்பில்

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளார் என்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்றும் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்தை டெடி படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் இயக்க உள்ளார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

20 கோடி

20 கோடி

நடிகர் ஆர்யா 7 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில், சார்பட்டா பரம்பரை தந்த அதிரடி வெற்றியால் அவரது சம்பளம் 20 கோடி வரை உயர்ந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் ஷாக்கிங் தகவலை கொடுத்துள்ளன. அதற்கும் அதிகமாக ஆர்யா கேட்டாலும் அதை கொடுத்து அவரை புக் பண்ண ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் ரெடியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X