ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு.. கோலாகலமாக சென்னையில் இன்று நடக்கிறது.. ‘தல’ கலந்துக்குவாரா?

Recommended Video

ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு கோலாகலமாக சென்னையில் இன்று நடக்கிறது- வீடியோ

சென்னை: நடிகர் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுகிறது.

கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்தபோது, காதலில் விழுந்த ஆர்யா - சாயிஷா ஜோடி, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஞாயிறன்று திருமணம் செய்து கொண்டனர். ஹைதராபாத்தில் மிகவும் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.

மெகந்தி, சங்கீத் என திருமணத்திற்கு இருநாட்கள் முன்பே கொண்டாட்டம் தொடங்கி விட்டது. வண்ண வண்ண உடையில் ஆர்யா, சாயிஷாவின் திருமணக் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

திருமண வரவேற்பு:

திருமண வரவேற்பு:

ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றதால் தமிழ்த் திரையுலகில் இருந்து சூர்யா, கார்த்தி, விஷால் என சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில், சென்னையில் இன்று அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திரக்கூட்டம்

நட்சத்திரக்கூட்டம்

திரையுலகில் அனைவரும் நட்பாக பழகக்கூடிய நடிகர்களுள் ஒருவர் ஆர்யா. எனவே, சென்னையில் நடைபெறும் வரவேற்பில் அவரது திரையுலக நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. இதனால் வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திரக் கூட்டத்தோடு கோலாகலமாக நடைபெறும் என்கின்றனர்.

அவர் வருவாரா?

அவர் வருவாரா?

ஆரம்பம் படத்தில் அஜித்துடன் ஆர்யா சேர்ந்து நடித்தார். ஆனால், தற்போது நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித் ஹைதராபாத்தில் பிசியாக இருக்கிறார். எனவே, இத்திருமண வரவேற்பில் அவர் கலந்து கொள்வாரா என்பது சந்தேகமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X