தம்பியின் படத்தைப் பார்த்து தேம்பியழுத அண்ணன்!
நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. இவரும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, புத்தகம் என்ற படத்தில் நடித்தார்.
ஆர்யாவே தம்பியை வைத்து சொந்தமாக படித்துறை என்ற படம் எடுத்து, ஏனோ அதை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்தும்விட்டார்.
இந்த நிலையில் சத்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் எடுத்துள்ளார். அமரகாவியம் என்று தலைப்பு.
விஜய் ஆன்டனியை வைத்து 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்த காதல் கதையை இயக்கியுள்ளார்.

கண்ணீர்
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் என்ற முறையில் ஆர்யாவும் அவருடைய ஓரிரு நண்பர்களும் படம் பார்த்தனர். காட்சி முடிந்தவுடன் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் துளிகள்.
ஈரமான கண்களுடன் யாரிடமும் பேசாமல் அவர் திரையரங்கை விட்டு வெளியேறினார். எதையும் மறைத்து பேசி பழக தெரியாதவர் என்ற அறியப்படும் ஆர்யா, தான் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றார்.

143 கேக்
என்ன நினைத்தாரோ என்னவோ, சட்டென தனது உதவியாளரை அழைத்து 143 என்ற எண் டிசைன் செய்த கேக் வாங்கி வரச் சொன்னார். கேக் வந்தவுடன் தனது படக் குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்தாராம். அது என்ன 143 கேக் என்ற கேள்விக்கு '143 என்கிற எண் காதலுக்கு மிக முக்கியமான எண் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஐ லவ் யூ
"I Love you என்ற அந்த மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம் தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றியதுதான் இந்த கேக் யோசனை," என்றார் ஆர்யா.

மியா ஜார்ஜ்
படத்தை பற்றி ஆர்யா மேலும் கூறுகையில், "இயக்குனர் ஜீவா ஷங்கர் இதற்கு முன்னர் 'நான்' திரைப்படத்தை இயக்கியவர். என் நெருங்கிய நண்பரும் கூட. நாயகன் சத்யா என் தம்பி. நாயகி மியா ஜார்ஜ் - சத்யா ஜோடி, ஒரு இனிமையான காதல் கதையை நம் கண் முன் நிறுத்தப் போகிறது.

பெருமிதம்
ஒரு நடிகனாக நான் சினிமாவில் பல படங்களை பார்த்து இருக்கிறேன், அந்த மன நிலையே வேறு. ஆனால் முதல் முறையாக ஒரு தாயாரிப்பாளர் என்ற முறையில் 'அமர காவியம்' பார்த்து எனக்கு கிடைத்த பிரமிப்பும், பெருமிதமும் சொல்லில் அடங்காதவை. இந்த உணர்வு என்னை மேலும் தரமான படங்களை தர வேண்டும் என சொல்ல வைக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











