சூர்யாவுடன் கைகோர்க்கும் ஆர்யா!
Recommended Video

சூர்யாவுடன் கைகோர்க்கும் ஆர்யா - கீர்த்தி சுரேஷுடன் கைகோர்க்கும் சிம்பு- வீடியோ
சென்னை: கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் சூர்யாவின் 37 வது படத்தில் ஆர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமீரின் சந்தனதேவன், சந்தோஷ் பி ஜெயக்குமாரின் கஜினிகாந்த், சுந்தர் சியின் சங்கமித்ரான்னு மூன்று வேறுபட்ட கதைக்களங்களில் ஆர்யா நடிப்பது தெரிந்த விஷயம் தான்.

கேவி ஆனந்த் இயக்கும் சூர்யாவின் 37 படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் மோகன்லால், போமன் இராணி , சயிஷா, சமுத்திரக்கனி என்று இருக்கும் நட்சத்திர பட்டாளத்தில் ஆர்யாவும் ஐக்கியமாகி இருக்காராம்.
ஆர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் சூர்யாவுக்கு நிகரான ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒரே படத்தில் ஆர்யா, சூர்யா... நெக்ஸ்ட் யார்யான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
arya surya kvanand london samuthirakani sayeesha mohanlal ஆர்யா சூர்யா கேவி ஆனந்த் லண்டன் சமுத்திரக்கனி சாயிஷா மோகன்லால்


Click it and Unblock the Notifications