ஓவரா சைக்கிள் ஓட்டினால் விந்தணு குறையுமா?: ஆர்யா விளக்கம்
சென்னை: ஓவராக சைக்கிள் ஓட்டினால் விந்தணு எண்ணிக்கை குறைந்துவிடுமா என ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் ஆர்யா பதில் அளித்துள்ளார்.
கடம்பன் படத்தை பெரிதும் நம்பும் ஆர்யா சுந்தர் சி.யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் நடிக்கிறார். மேலும் அமீரின் சந்தனத் தேவன் படத்தில் தனது தம்பி சத்யாவுடன் நடிக்கிறார்.
இது தவிர அவர் தி கிரேட் ஃபாதர் மலையாள படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்யா
ஆர்யா படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் ஜிம்முக்கு செல்லத் தவறுவது இல்லை. மேலும் அவருக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அவரை பார்த்து கோலிவுட் பிரபலங்கள் சிலரும் சைக்கிளும், கையுமாக உள்ளனர்.

ட்விட்டர்
ஆர்யா ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். மேலும் சைக்கிள் ஓட்டுபவர்கள், ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் செய்பவர்கள் அதை ஆர்யாவிடம் ட்விட்டரில் தெரிவித்தால் உடனே அவர்களை பாராட்டி முத்தம் கொடுப்பார். முத்த ஸ்மைலிங்க.
சைக்கிள்
ஹலோ ஆர்யா, ஓவராக சைக்கிள் ஓட்டினால் விந்தணு எண்ணிக்கை குறையும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்டார்.
இல்லை
விந்தணு எண்ணிக்கை குறித்த கேள்விக்கு ஆர்யா ட்விட்டரில் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, நான் 15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டியுள்ளேன்... இதுவரை அது குறையவில்லை என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











