எனிமி படத்தோட க்ளைமாக்ஸ் சீனை மறக்கவே முடியாது... ரிலீசுக்காக ஆர்யா வெயிட்டிங்!
சென்னை : எனிமி படம் விஷால் மற்றும் ஆர்யாவின் மிரட்டலான நடிப்பில் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது.
படத்தில் விஷாலுக்கு வில்லனாகியுள்ளார் நடிகர் ஆர்யா. சமீபத்தில் வெளியான ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் சீன் குறித்து தற்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஆர்யா.

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா மற்றும் விஷால் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் எனிமி. கோலிவுட்டில் பல காலங்களாக இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம். ஆனால் இந்தப் படத்தின்மூலம் விஷாலுக்கு எனிமி ஆகியுள்ளார் ஆர்யா. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்துள்ளது.

அண்ணாத்தயுடன் மோதும் எனிமி
படத்தில் விஷால் மற்றும் ஆர்யாவுடன் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். வரும் தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் இந்தப் படம் மோதவுள்ளது. தீபாவளி ரேசிலிருந்து மாநாடு படம் விலகியுள்ள நிலையில் தற்போது எனிமி படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

தயாரிப்பாளர் ஆதங்கம்
அண்ணாத்த படத்துடன் எனிமி படம் மோதவுள்ள நிலையில் வெளியிடுவதற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று எனிமி தயாரிப்பாளர் வினோத் குமார் சில தினங்களுக்கு முன்பு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆயினும் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் அண்ணாத்த படம்
தனக்கு வெறுமனே 250 திரையரங்குகள் கிடைத்தால்கூட போதுமானது என்றும் அதன்மூலம் போதிய ஷேர் தங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் தெரிவித்திருந்தார். சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அந்தப் படத்தை வெளியிட திரையரங்குகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
Recommended Video

மிரட்டலான எனிமி ட்ரெயிலர்
இந்நிலையில் எனிமி படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்துள்ளது. அதன்படி நண்பர்களாக இருக்கும் இருவர் எதிரிகளாக மாறுவது போல காட்சிகள் அமைந்துள்ளது.

எனிமி ரிலீசுக்கு காத்திருக்கும் ஆர்யா
இதனிடையே படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். விஷாலுடன் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக மிகவும் சிரமப்பட்டு நடித்ததாகவும் அதுபோல மீண்டும் நடிப்பது கடினம் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











