twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பாயும் ஆர்யா யார்யா இந்த ஆர்யா? என்று பலரும் கேட்குமளவிற்கு கோலிவுட்டில் லேட்டஸ்டாக நுழைந்து படு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் "உள்ளம் கேட்குமே புகழ் ஆர்யா.ஜீவாவின் "உள்ளம் கேட்குமே தான் ஆர்யாவின் முதல் படம். ஆனால் இவரது போதாத காலம், முதல் படம் சிறிது காலம்பெட்டிக்குள் முடங்கி விட்டது. ஆனாலும் அதற்குப் பிறகு இவர் புக்கான அறிந்தும் அறியாமலும் வெளியானது.இந்தப் படத்தில் ஆன்டி ஹீரோவாக ஆர்யா நடித்திருந்தாலும், பலரது புருவத்தையும் உயர வைத்தார். இந்தப் படம் வெளிவந்தநேரம் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த உள்ளம் கேட்குமே படமும் வெளியானது.இதுவும் ஆர்யாவுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுக்க, இப்போது ஆர்யாவின் கைவசம் வரிசையாக படங்கள். இவர்சோனியா அகர்வாலுடன் நடித்து வந்த ஒரு கல்லூரியின் கதை கிட்டத்தட்ட முடிந்து விட்டது.இதற்கடுத்து புதுமுக இயக்குனர் இகோர் இயக்கத்தில் கலாபக்காதலன் என்ற படத்தில் நடிக்கிறார். இது தவிரபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தை இயக்கிய எஸ்.எஸ். ஸ்டேன்லியின் இன்னமும் பெயரிடப்படாத ஒரு படத்தில்ஆர்யா புக்காகியுள்ளார்.அறிந்தும் அறியாமலும் படத்தை தயாரித்த அதே கம்பெனியின் அடுத்தப் படத்திலும் இவர் தான் நாயகன். இந்தப் படத்தின்இயக்குனர் அதே விஷ்ணுவர்தன்.பட்டியல் இன்னும் முடியவில்லை. ராடன் டிவி ராதிகாவுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு தனியே பிரிந்து வந்த சித்தி புகழ் இயக்குனர்சி.ஜே. பாஸ்கர் முதன் முதலாக பெரிய திரைக்கு வருகிறார். இந்தப் படத்திலும் ஆர்யா தான் நாயகன்.இந்தப் படத்தை தயாரிப்பது யார் தெரியுமா? எந்த நிறுவனத்துடன் பாஸ்கர் மல்லுக்கட்டினாரோ, அதே ராதிகாவின் ராடன் டிவிதான் இந்தப் படத்தை தயாரிக்கிறது.வந்த வேகத்தில் இப்படி கை நிறைய படங்களை வைத்திருக்கும் ஆர்யாவை அப்படியே வளைத்துப் போட்டு உங்களைப் பற்றிசொல்லுங்களேன் என்றோம். எனது சொந்தப் பெயர் ஜம்ஷெத் (நல்லவேளை பெயரை மாற்றினார்கள்). கேரளாவின் கடைக்கோடி மாவட்டமானகாசர்கோட்டிலுள்ள பையனூர் தான் என்னுடைய சொந்த ஊர் (போச்சுடா, இவருக்கும் கேரளா தானா?)ஆனா எனக்கு எங்க ஊரை விட சென்னையைத் தான் தெரியும். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ.வில் தான் படித்தேன்.நான் ஒரு ஓட்டப்பந்தய வீரர் தெரியுமா? பி.டி. உஷா மாதிரி ஓடிப் புகழ் பெறணும். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஓடி பெருமைசேர்க்கணும் இதெல்லாம் என்னோட ஆசைகள். ஆனால் நம்ம நாட்டில விளையாட்டுக்கு போதிய ஆதரவு இல்லை.ஸ்கூல் முடிஞ்சதும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தான் கிரசண்ட் என்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைத்தது. அப்படியே சைடுலமாடலிங் பண்ணினேன். சென்னை சில்க்ஸ், பிரிட்டானியா பிஸ்கட், மரினோ கூல்டிரிங்ஸ் இப்படி ஒரு ஓரமா விளம்பரப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.அப்போ தான் ஜீவா சாரோட அறிமுகம் கிடைத்தது. அவர் தான் தன்னுடைய உள்ளம் கேட்குமே வில் என்னை அறிமுகம் செய்தார்.ஆசின், பூஜா, நான் மூணு பேருமே அந்தப் படத்தில் அறிமுகமானாம் என்ற ஆர்யாவிடம், உங்களுக்கு பெண் ரசிகைகள்அதிகமாமே என்று கண் சிமிட்டினோம்.யார் அப்படி சொன்னது என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. உண்மையை உள்ளபடியே ஒத்துக் கொண்டார். குழந்தைப் பருவம்முதல் கோ எஜுகேஷன்ல படிக்கிறதினால பெண்களோட பழகுறது எனக்குப் புதுசு கிடையாது.கேர்ள் பிரண்ட்ஸ் எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி தான். காலேஜ், மாடலிங், சினிமான்னு எப்பவும் பெண்கள் கூடவே ஜாலியாஇருக்கிறேன் (ம்... எங்கேயோ மச்சம் இருக்கப்பா). பெண்கள் அழகை ஒரு நாள் ரசிக்கலாம், ஒரு மாதம் ரசிக்கலாம், கூடிப்போனால் ஒரு வருடம் ரசிக்கலாம் அவ்வளவு தான்.அதுக்கு மேல அவங்களோட தோற்றத்தை ரசிக்க முடியாது (மெதுவா பேசுங்க.. உங்க கேர்ள் பிரண்ட்ஸ் காதில விழுந்திடப்போகுது).பெண்களுக்குள் இருக்கிற குணத்தை தான் வாழ்நாள் பூரா ரசிக்க முடியும் என்ற ஆர்யாவிடம், சரி முடிவா பெண்களைப் பற்றிஎன்ன தான் சொல்ல வரீங்க என்று கேட்டால் பெண்களுக்கு அவங்களோட கேரக்டர் தான் அழகு தெரியுமா என்றார்.ரொம்பத் தான் தெளிவா இருக்கார்...!

    By Staff
    |

    யார்யா இந்த ஆர்யா? என்று பலரும் கேட்குமளவிற்கு கோலிவுட்டில் லேட்டஸ்டாக நுழைந்து படு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் "உள்ளம் கேட்குமே புகழ் ஆர்யா.

    ஜீவாவின் "உள்ளம் கேட்குமே தான் ஆர்யாவின் முதல் படம். ஆனால் இவரது போதாத காலம், முதல் படம் சிறிது காலம்பெட்டிக்குள் முடங்கி விட்டது. ஆனாலும் அதற்குப் பிறகு இவர் புக்கான அறிந்தும் அறியாமலும் வெளியானது.

    இந்தப் படத்தில் ஆன்டி ஹீரோவாக ஆர்யா நடித்திருந்தாலும், பலரது புருவத்தையும் உயர வைத்தார். இந்தப் படம் வெளிவந்தநேரம் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த உள்ளம் கேட்குமே படமும் வெளியானது.

    இதுவும் ஆர்யாவுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுக்க, இப்போது ஆர்யாவின் கைவசம் வரிசையாக படங்கள். இவர்சோனியா அகர்வாலுடன் நடித்து வந்த ஒரு கல்லூரியின் கதை கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

    இதற்கடுத்து புதுமுக இயக்குனர் இகோர் இயக்கத்தில் கலாபக்காதலன் என்ற படத்தில் நடிக்கிறார். இது தவிரபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தை இயக்கிய எஸ்.எஸ். ஸ்டேன்லியின் இன்னமும் பெயரிடப்படாத ஒரு படத்தில்ஆர்யா புக்காகியுள்ளார்.

    அறிந்தும் அறியாமலும் படத்தை தயாரித்த அதே கம்பெனியின் அடுத்தப் படத்திலும் இவர் தான் நாயகன். இந்தப் படத்தின்இயக்குனர் அதே விஷ்ணுவர்தன்.

    பட்டியல் இன்னும் முடியவில்லை. ராடன் டிவி ராதிகாவுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு தனியே பிரிந்து வந்த சித்தி புகழ் இயக்குனர்சி.ஜே. பாஸ்கர் முதன் முதலாக பெரிய திரைக்கு வருகிறார். இந்தப் படத்திலும் ஆர்யா தான் நாயகன்.

    இந்தப் படத்தை தயாரிப்பது யார் தெரியுமா? எந்த நிறுவனத்துடன் பாஸ்கர் மல்லுக்கட்டினாரோ, அதே ராதிகாவின் ராடன் டிவிதான் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

    வந்த வேகத்தில் இப்படி கை நிறைய படங்களை வைத்திருக்கும் ஆர்யாவை அப்படியே வளைத்துப் போட்டு உங்களைப் பற்றிசொல்லுங்களேன் என்றோம்.

    எனது சொந்தப் பெயர் ஜம்ஷெத் (நல்லவேளை பெயரை மாற்றினார்கள்). கேரளாவின் கடைக்கோடி மாவட்டமானகாசர்கோட்டிலுள்ள பையனூர் தான் என்னுடைய சொந்த ஊர் (போச்சுடா, இவருக்கும் கேரளா தானா?)

    ஆனா எனக்கு எங்க ஊரை விட சென்னையைத் தான் தெரியும். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ.வில் தான் படித்தேன்.

    நான் ஒரு ஓட்டப்பந்தய வீரர் தெரியுமா? பி.டி. உஷா மாதிரி ஓடிப் புகழ் பெறணும். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஓடி பெருமைசேர்க்கணும் இதெல்லாம் என்னோட ஆசைகள். ஆனால் நம்ம நாட்டில விளையாட்டுக்கு போதிய ஆதரவு இல்லை.

    ஸ்கூல் முடிஞ்சதும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தான் கிரசண்ட் என்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைத்தது. அப்படியே சைடுலமாடலிங் பண்ணினேன். சென்னை சில்க்ஸ், பிரிட்டானியா பிஸ்கட், மரினோ கூல்டிரிங்ஸ் இப்படி ஒரு ஓரமா விளம்பரப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.

    அப்போ தான் ஜீவா சாரோட அறிமுகம் கிடைத்தது. அவர் தான் தன்னுடைய உள்ளம் கேட்குமே வில் என்னை அறிமுகம் செய்தார்.ஆசின், பூஜா, நான் மூணு பேருமே அந்தப் படத்தில் அறிமுகமானாம் என்ற ஆர்யாவிடம், உங்களுக்கு பெண் ரசிகைகள்அதிகமாமே என்று கண் சிமிட்டினோம்.

    யார் அப்படி சொன்னது என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. உண்மையை உள்ளபடியே ஒத்துக் கொண்டார். குழந்தைப் பருவம்முதல் கோ எஜுகேஷன்ல படிக்கிறதினால பெண்களோட பழகுறது எனக்குப் புதுசு கிடையாது.

    கேர்ள் பிரண்ட்ஸ் எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி தான். காலேஜ், மாடலிங், சினிமான்னு எப்பவும் பெண்கள் கூடவே ஜாலியாஇருக்கிறேன் (ம்... எங்கேயோ மச்சம் இருக்கப்பா).

    பெண்கள் அழகை ஒரு நாள் ரசிக்கலாம், ஒரு மாதம் ரசிக்கலாம், கூடிப்போனால் ஒரு வருடம் ரசிக்கலாம் அவ்வளவு தான்.அதுக்கு மேல அவங்களோட தோற்றத்தை ரசிக்க முடியாது (மெதுவா பேசுங்க.. உங்க கேர்ள் பிரண்ட்ஸ் காதில விழுந்திடப்போகுது).

    பெண்களுக்குள் இருக்கிற குணத்தை தான் வாழ்நாள் பூரா ரசிக்க முடியும் என்ற ஆர்யாவிடம், சரி முடிவா பெண்களைப் பற்றிஎன்ன தான் சொல்ல வரீங்க என்று கேட்டால் பெண்களுக்கு அவங்களோட கேரக்டர் தான் அழகு தெரியுமா என்றார்.

    ரொம்பத் தான் தெளிவா இருக்கார்...!

      Read more about: busy arya
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X