»   »  சரண் - ஆர்யா மோதல்! பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக சரண் தயாரிப்பு பிளஸ் இயக்கத்தில்உருவாகும் வட்டாரம் படத்திலிருந்து ஆர்யா தன்னிச்சையாக விலகிக் கொண்டுள்ளார்.இதனால் சரணுக்கும், ஆர்யாவுக்கும் மோதல் மூண்டுள்ளதாம். பிதாமகனுக்குப் பின்னர் பாலா இயக்கப் போகும் படம் நான் கடவுள். இதில்ஹீரோவாக நடிக்க அஜீத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்காக நீண்ட தலைமுடியெல்லாம் வளர்த்திருந்தார் அஜீத். ஆனால் படம் தொடங்குவது தாமதமாகவே,வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அஜீத். பரமசிவன், திருப்பதி என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்ட அஜீத், நான்கடவுள் எப்போது என்று பாலாவிடம் கேட்டுள்ளார். இன்னும் தாமதமாகும் என்றுபாலா கூற, அப்படியானால் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று நட்புடன்பாலாவிடம் கூறி விட்டு அதிலிருந்து விலகி விட்டார் அஜீத். இதையடுத்து அஜீத்துக்குப் பதில் சூர்யாவை நடிக்க வைக்கலாமா என்று முதலில்யோசித்தார் பாலா. ஆனால் நான் கடவுள் கேரக்டருக்கு சூர்யா பொருத்தமாக இருக்கமாட்டார் என்று நினைத்ததால் ஆர்யாவை அணுகினார். கடவுளே இப்படி ஒரு வாய்ப்பா என்று சந்தோஷப்பட்டுப் போன ஆர்யா உடனேஓ.கே. சொல்லி விட்டார். இங்குதான் சிக்கல் ஆரம்பமாகியது. பாலா படத்திற்கு ஆர்யா கொடுத்துள்ள கால்ஷீட், ஏற்கனவே சரண் தயாரிப்பில்உருவாகவுள்ள வட்டாரம் என்ற படத்திறகாக கொடுத்த தேதிகளாம். இதனால் சரண்கடுப்பாகியுள்ளார். வட்டாரம் படத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டு விட்டு, அந்த தேதிகளை எப்படிபாலாவுக்கு கொடுக்கலாம், இது நியாயமற்றது, எனவே ஆர்யா ஒப்புக் கொண்டபடிஎனது படத்தில்தான் முதலில் நடிக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் சங்கத்தில்புகார் கொடுத்துள்ளார் சரண். பதிலுக்கு ஆர்யாவும் நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நான்எழுத்துப்பூர்வமாக சரணிடம் ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளவில்லை.தயாரிப்பாளர் என்ற முறையில்தான் வட்டாரம் படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது சரண் தானே இப்படத்தை இயக்கப் போவதாக கூறுகிறார். ஆனால்அவரது இயக்கத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. எழுத்துப்பூர்வமாக எதையும் செய்திராதபோது வட்டாரம் படத்திலிருந்து நான்விலகியதில் எந்தத் தவறும் இல்லை. சரண் கொடுத்த புகாரை நான் உரிய முறையில்சந்திப்பேன் என்று கூறியுள்ளார் ஆர்யா. ஆர்யா, சரண் மோதலால் கோலிவுட் சூடாகியுள்ளது. மேலும், இந்த விஷயத்தில்ஆர்யா மீதுதான் தவறு இருக்கிறது என்று கோலிவுட் தரப்பில் முனுமுனுக்கப்படுகிறது.பெரிய டைரக்டர் என்றவுடன் சரணை தூக்கி எறிய ஆர்யா முடிவு செய்தது மிகப்பெரிய தவறு. ஒரு காலத்தில் அஜீத்துக்கு மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தவரேசரண்தான். அப்படிப்பட்டவர் இயக்கத்தில் நடிப்பதை விரும்பவில்லை, தயாரிப்பதாக இருந்தால்நடிப்பேன் என்று கூறுவது சரணை அவமதிப்பது போலாகும் என்று அவர்கள்கூறுகிறார்கள்.

சரண் - ஆர்யா மோதல்! பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக சரண் தயாரிப்பு பிளஸ் இயக்கத்தில்உருவாகும் வட்டாரம் படத்திலிருந்து ஆர்யா தன்னிச்சையாக விலகிக் கொண்டுள்ளார்.இதனால் சரணுக்கும், ஆர்யாவுக்கும் மோதல் மூண்டுள்ளதாம். பிதாமகனுக்குப் பின்னர் பாலா இயக்கப் போகும் படம் நான் கடவுள். இதில்ஹீரோவாக நடிக்க அஜீத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்காக நீண்ட தலைமுடியெல்லாம் வளர்த்திருந்தார் அஜீத். ஆனால் படம் தொடங்குவது தாமதமாகவே,வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அஜீத். பரமசிவன், திருப்பதி என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்ட அஜீத், நான்கடவுள் எப்போது என்று பாலாவிடம் கேட்டுள்ளார். இன்னும் தாமதமாகும் என்றுபாலா கூற, அப்படியானால் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று நட்புடன்பாலாவிடம் கூறி விட்டு அதிலிருந்து விலகி விட்டார் அஜீத். இதையடுத்து அஜீத்துக்குப் பதில் சூர்யாவை நடிக்க வைக்கலாமா என்று முதலில்யோசித்தார் பாலா. ஆனால் நான் கடவுள் கேரக்டருக்கு சூர்யா பொருத்தமாக இருக்கமாட்டார் என்று நினைத்ததால் ஆர்யாவை அணுகினார். கடவுளே இப்படி ஒரு வாய்ப்பா என்று சந்தோஷப்பட்டுப் போன ஆர்யா உடனேஓ.கே. சொல்லி விட்டார். இங்குதான் சிக்கல் ஆரம்பமாகியது. பாலா படத்திற்கு ஆர்யா கொடுத்துள்ள கால்ஷீட், ஏற்கனவே சரண் தயாரிப்பில்உருவாகவுள்ள வட்டாரம் என்ற படத்திறகாக கொடுத்த தேதிகளாம். இதனால் சரண்கடுப்பாகியுள்ளார். வட்டாரம் படத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டு விட்டு, அந்த தேதிகளை எப்படிபாலாவுக்கு கொடுக்கலாம், இது நியாயமற்றது, எனவே ஆர்யா ஒப்புக் கொண்டபடிஎனது படத்தில்தான் முதலில் நடிக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் சங்கத்தில்புகார் கொடுத்துள்ளார் சரண். பதிலுக்கு ஆர்யாவும் நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நான்எழுத்துப்பூர்வமாக சரணிடம் ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளவில்லை.தயாரிப்பாளர் என்ற முறையில்தான் வட்டாரம் படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது சரண் தானே இப்படத்தை இயக்கப் போவதாக கூறுகிறார். ஆனால்அவரது இயக்கத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. எழுத்துப்பூர்வமாக எதையும் செய்திராதபோது வட்டாரம் படத்திலிருந்து நான்விலகியதில் எந்தத் தவறும் இல்லை. சரண் கொடுத்த புகாரை நான் உரிய முறையில்சந்திப்பேன் என்று கூறியுள்ளார் ஆர்யா. ஆர்யா, சரண் மோதலால் கோலிவுட் சூடாகியுள்ளது. மேலும், இந்த விஷயத்தில்ஆர்யா மீதுதான் தவறு இருக்கிறது என்று கோலிவுட் தரப்பில் முனுமுனுக்கப்படுகிறது.பெரிய டைரக்டர் என்றவுடன் சரணை தூக்கி எறிய ஆர்யா முடிவு செய்தது மிகப்பெரிய தவறு. ஒரு காலத்தில் அஜீத்துக்கு மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தவரேசரண்தான். அப்படிப்பட்டவர் இயக்கத்தில் நடிப்பதை விரும்பவில்லை, தயாரிப்பதாக இருந்தால்நடிப்பேன் என்று கூறுவது சரணை அவமதிப்பது போலாகும் என்று அவர்கள்கூறுகிறார்கள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக சரண் தயாரிப்பு பிளஸ் இயக்கத்தில்உருவாகும் வட்டாரம் படத்திலிருந்து ஆர்யா தன்னிச்சையாக விலகிக் கொண்டுள்ளார்.இதனால் சரணுக்கும், ஆர்யாவுக்கும் மோதல் மூண்டுள்ளதாம்.

பிதாமகனுக்குப் பின்னர் பாலா இயக்கப் போகும் படம் நான் கடவுள். இதில்ஹீரோவாக நடிக்க அஜீத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்காக நீண்ட தலைமுடியெல்லாம் வளர்த்திருந்தார் அஜீத். ஆனால் படம் தொடங்குவது தாமதமாகவே,வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அஜீத்.

பரமசிவன், திருப்பதி என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்ட அஜீத், நான்கடவுள் எப்போது என்று பாலாவிடம் கேட்டுள்ளார். இன்னும் தாமதமாகும் என்றுபாலா கூற, அப்படியானால் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று நட்புடன்பாலாவிடம் கூறி விட்டு அதிலிருந்து விலகி விட்டார் அஜீத்.


இதையடுத்து அஜீத்துக்குப் பதில் சூர்யாவை நடிக்க வைக்கலாமா என்று முதலில்யோசித்தார் பாலா. ஆனால் நான் கடவுள் கேரக்டருக்கு சூர்யா பொருத்தமாக இருக்கமாட்டார் என்று நினைத்ததால் ஆர்யாவை அணுகினார்.

கடவுளே இப்படி ஒரு வாய்ப்பா என்று சந்தோஷப்பட்டுப் போன ஆர்யா உடனேஓ.கே. சொல்லி விட்டார். இங்குதான் சிக்கல் ஆரம்பமாகியது.

பாலா படத்திற்கு ஆர்யா கொடுத்துள்ள கால்ஷீட், ஏற்கனவே சரண் தயாரிப்பில்உருவாகவுள்ள வட்டாரம் என்ற படத்திறகாக கொடுத்த தேதிகளாம். இதனால் சரண்கடுப்பாகியுள்ளார்.


வட்டாரம் படத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டு விட்டு, அந்த தேதிகளை எப்படிபாலாவுக்கு கொடுக்கலாம், இது நியாயமற்றது, எனவே ஆர்யா ஒப்புக் கொண்டபடிஎனது படத்தில்தான் முதலில் நடிக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் சங்கத்தில்புகார் கொடுத்துள்ளார் சரண்.

பதிலுக்கு ஆர்யாவும் நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நான்எழுத்துப்பூர்வமாக சரணிடம் ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளவில்லை.தயாரிப்பாளர் என்ற முறையில்தான் வட்டாரம் படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்.

ஆனால் இப்போது சரண் தானே இப்படத்தை இயக்கப் போவதாக கூறுகிறார். ஆனால்அவரது இயக்கத்தில் நடிக்க நான் விரும்பவில்லை.

எழுத்துப்பூர்வமாக எதையும் செய்திராதபோது வட்டாரம் படத்திலிருந்து நான்விலகியதில் எந்தத் தவறும் இல்லை. சரண் கொடுத்த புகாரை நான் உரிய முறையில்சந்திப்பேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.


ஆர்யா, சரண் மோதலால் கோலிவுட் சூடாகியுள்ளது. மேலும், இந்த விஷயத்தில்ஆர்யா மீதுதான் தவறு இருக்கிறது என்று கோலிவுட் தரப்பில் முனுமுனுக்கப்படுகிறது.

பெரிய டைரக்டர் என்றவுடன் சரணை தூக்கி எறிய ஆர்யா முடிவு செய்தது மிகப்பெரிய தவறு. ஒரு காலத்தில் அஜீத்துக்கு மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தவரேசரண்தான்.

அப்படிப்பட்டவர் இயக்கத்தில் நடிப்பதை விரும்பவில்லை, தயாரிப்பதாக இருந்தால்நடிப்பேன் என்று கூறுவது சரணை அவமதிப்பது போலாகும் என்று அவர்கள்கூறுகிறார்கள்.

Read more about: arya clashes with saran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil