ஒரே சமயத்தில் வெங்கடாஜலபதி வேஷமும்... பேய் படத்திலும் நடிக்கும் ஆர்யன் ஷ்யாம்

சென்னை: பிரம்மாண்ட நாயகன் படத்தில் பகவான் பாலாஜியாக நடித்ததற்காக ஆர்யன் ஷ்யாமை பாராட்டி Young Superstar என்ற பட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியது

ஆர்யன்ஷ்யாம் நடித்த பிரம்மாண்ட நாயகன் படத்தைப் பார்த்த திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அவரது குழுவினர் படக்குழுவினரையும் இயக்குனர் பாம்பே ஞானத்தையும் பாராட்டியதோடு படத்தில் திருப்பதி சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதியாக நடித்த ஆர்யன் ஷ்யாமை கட்டி பிடித்து பாராட்டி பகவான் பாலாஜியாகவே இந்தப் படத்தில் வாழ்ந்துக் காட்டியிருக்கிறீர்கள் என்று பாராட்டி உள்ளது.

அவரை திரைப்படம் மூலமாக தரிசனம் பண்ற பாக்கியத்தை கொடுத்திருக்கிறீர்கள் இப்படத்தில் விரதம் இருந்து நடித்ததாக செய்தி அறிந்தோம் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு எங்களது தேவஸ்தான சாா்பில் youth Superstar என்ற பட்டத்தை வழங்கி மகிழ்கிறோம். என்று கூறியிருக்கிறார்கள்.

மகாலட்சுமியாகவும் பத்மாவதி தேவியாகவும் ...

மகாலட்சுமியாகவும் பத்மாவதி தேவியாகவும் ...

மேலும் ஆர்யன் ஷ்யாமுக்கு இது சம்பந்தமாக தேவஸ்தான தலைவர் துஷ்மந்த் குமார்தாஸ்பாராட்டி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியாக ஆர்யன் ஷ்யாம் நடித்திருக்கிறார் நடிகை அதிதி.மகாலட்சுமியாகவும் நடிகை சந்தியா பத்மாவதி தேவியாகவும் நடித்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ். ஆனந்த்பாபு கவனிக்க இசையை திவாகர் சுப்பிரமணியம் அமைத்திருக்கிறார். இந்த பிரம்மாண்ட நாயகன்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் பாம்பே ஞானம் சுப்பிரமணியம்.

சைக்கலாஜிக்கல் திரில்லர்

சைக்கலாஜிக்கல் திரில்லர்

இதற்கிடையில் ஆர்யன் ஷ்யாம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் AVM புரொடக்ஷன்ஸ் வழங்கும் அந்த நாள் படமும் தயாராகி விரைவில் வெளிவரவிருக்கிறது இந்தப் படம் அமானுஷ்யம் மற்றும் பிளாக் மேஜிக் கொண்ட சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் ஆகும்.தமிழ் சினிமாவின் மறக்க முடியாத தவிர்க்க முடியாத ஒரு ஸ்டூடியோ என்றால் ஏவிஎம் ஸ்டுடியோ. அதுமட்டுமல்லாமல் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பலதரப்பட்ட படங்கள் நம் சினிமா ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தது யாவரும் அறிந்ததே. ஏவிஎம் சரவணன் அவர்களுடைய மகன் எம்எஸ் குகன் மற்றும் எம் எஸ் குகனுடைய மகள் அபர்ணாவை திருமணம் செய்து கொண்டவர் தான் ஆரியன் ஷாம். எம்எஸ் குகனுடைய மாப்பிள்ளை ஏவிஎம் சரவணன் அவர்களின் பேத்தியின் கணவர்.

பெயரை காப்பாற்றும் வகையில்

பெயரை காப்பாற்றும் வகையில்

பாரம்பரியமிக்க ஏவிஎம் புரோடக்சன்ஸ் பல சாதனைகள் செய்து உள்ளது. அந்த நிறுவனத்தின் அடுத்த ஜெனரேஷன் சினிமாவில் வெற்றி பெற பல முயற்சிகள் செய்து வரும் தருணம் இது. ஏவிஎம் ஸ்டூடியோ ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பெயரை காப்பாற்றும் வகையில் அந்த வீட்டின் மருமகனாக இருக்கக்கூடிய ஆர்யன் ஷியாம் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சிவாஜிகணேசன் அவர்களுடைய நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் அந்த நாள் திரைப்படம் பலரால் பலமுறை பார்க்கப்பட்ட பாராட்டப்பட்ட ஒரு படம் ஆகும். அதே தலைப்பு கொண்டு இத்தனை வருடங்கள் ஆனபிறகும் ஏவிஎம் நிறுவனத்தின் வாரிசாக ஆரியன் ஷ்யாம் ஒரு ஹாரர் படத்தை "அந்த நாள்" என்ற தலைப்பின் மூலம் நடித்து வருவது எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

புதிய முயற்சிகளில் ஈடுபட்டு

புதிய முயற்சிகளில் ஈடுபட்டு

ஒரே சமயத்தில் வெங்கடாஜலபதி வேஷமும் இன்னொரு பக்கம் ஹாரர் படத்திற்காக அமானுஷ்ய சக்திகள் கொண்ட கதைக்கு ஏற்ப வித்தியாசமான கெட்டப் மற்றும் பேய் பிசாசு போன்ற பயம் கலந்த கதாபாத்திரம் செய்துவரும் ஆரியன் ஷாம் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். விரைவில் இரண்டு படங்களும் திரையரங்கில் வர இருக்கின்றது .பெருமாளாக தோன்றிய ஆரியன் ஷ்யாம் இன்னொரு பக்கம் பேய் அவதாரம் என்பது கொஞ்சம் கடினமான ஒன்றுதான், இருந்தாலும் கூட நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

பல நாள் விரதமிருந்து

பல நாள் விரதமிருந்து

தமிழ் சினிமாவில் ராகவேந்திரர் கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தது மற்றும் கிருஷ்ணராக ஆந்திராவில் என்டிஆர் நடித்தது மற்றும் பல தெய்வங்களின் கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் தோன்றியதை ரசிகர்கள் யாரும் மறக்கவில்லை. சிலருடைய முகபாவனைகள் தெய்வங்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் அமையும் அந்த வகையில் ஆரியன் ஷாம் நடித்திருக்கும் ப்ரமாண்ட நாயகன் படம் பல நாள் விரதமிருந்து கடவுள் பக்தியுடன் நிறைய மெனக்கெடல்கள் செய்து எடுக்கப்பட்ட படம். பொறுத்திருந்து பார்ப்போம் ஆர்யன் ஷாம் நடிக்கும் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X