ப்ளூ ஸ்டார் படம் எனக்கு எல்லாத்தையும் கொடுத்தது.. மேடையில் நெகிழ்ந்த அசோக் செல்வன்!
சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, பிரித்விராஜன், பகவதி பெருமாள் உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் வரும் 25ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், பா ரஞ்சித்,இயக்குநர் ஜெயக்குமார், கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன், தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இசைவெளியீட்டு விழாவில் பேசிய அசோக் செல்வன், இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெசலான படம், அது மட்டுமில்லாமல் ரொம்பவே பர்சனலும் கூட, ஏன் என்று கேட்டால் இந்தக் கதையா? இல்லை இக்கதையில் இருக்கும் அரக்கோணம் மக்களா? அவர்களின் வாழ்க்கை என் வாழ்க்கையோடு ஒத்துப் போனதா? என்று சொல்லத் தெரியவில்லை. வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் யாரும் அரவணைத்து ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டாரக்ளா? என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ப்ளூ ஸ்டார் நம்பிக்கையை கொடுத்து, ஜெயிப்போம் என்கின்ற நம்பிக்கையை கொடுக்கும் படமாக இருக்கும்.
ஸ்பெசலான படம்: ப்ளூ ஸ்டார்படம் எனக்கு அத்தனையையும் கொடுத்திருக்கிறது. நான் வாழ்ந்த வாழ்க்கையை திரையில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. மனைவியை கொடுத்திருக்கிறது. சிலர் பேசுவதற்கும் செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. பா.ரஞ்சித் அவர்கள் என்ன பேசுகிறாரோ அது போலவே நடப்பவர். அந்த மாதிரியான மனிதர்களை நான் பார்த்ததில்லை அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் என்றார்.
அரசியல் பேசினா தப்பா: இதையடுத்து பேசிய கீர்த்தி பாண்டியன் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் பயணம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது, இந்த படத்தின் கதை கேட்டதுமே எனக்கு பிடித்து விட்டது. மேலும், பா ரஞ்சித் அண்ணாவின் பெயர் இடம் பெற்றாலே அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விட்டீர்களா? என்று கேட்கின்றார்கள். அரசியல் பேசினால் என்ன தப்பு? இந்த கேள்வியை கேட்பவர்கள் முதலில் அவர்களின் மனதிற்குள் இந்த கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும்.ஏன் என்றால், நாம் அணிந்திருக்கும் உடையில், குடிக்கும் தண்ணீரில் கூட அரசியல் இருக்கிறது. அதை பற்றி நான் பேசவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் கிடையாது. அதை நீங்கள் பேச தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த படத்திலும் அரசியல் இருக்கிறது. ரஞ்சித் அண்ணா தயாரிக்கும், இயக்கும் படங்களில் அவர் சொல்கிற விஷயம் ரொம்ப முக்கிய.ம் அந்த விதத்தில் என்னுடைய குரலை இந்த படத்தில் பயன்படுத்துவதை பெருமையாக நினைக்கிறேன்.
கால போடு ராவண குலமே: இந்த படத்தில் காதல்,அரசியல், விளையாட்டு என அனைத்தும் கலந்த ஒரு முக்கோண திரைப்படம் இப்படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஜெயக்குமாருக்கு ரொம்ப நன்றி. இன்றைக்கு இந்த நாளில் இந்த விழா நடப்பது மிக முக்கியமானது. மேலும், தெருக்குரல் அறிவு வரிகளில் இந்த படத்தில் ஒரு பாட்டு இருக்கு என்று காலு வரும் கால போடு ராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே என பாடி கீர்த்தி பாண்டியன் பேச்சை முடித்தார்.


Click it and Unblock the Notifications











