அசோக் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்... பிரபல தயாரிப்பாளர் மகளுடன் காதல்... விரைவில் டும் டும் டும்!

சென்னை: கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அசோக் செல்வனுக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர்.

சூது கவ்வும் படத்தில் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், தற்போது ஹேண்ட்சமான ஹீரோ மெட்டீரியலாக மாறிவிட்டார்.

இந்நிலையில், அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளரின் மகள் ஒருவரை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சாக்லேட் ஹீரோ

சாக்லேட் ஹீரோ

சூது கவ்வும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். லயோலாவில் விஸ்காம் முடித்த இவர், பல குறும்படங்களில் நடித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கிய சூது கவ்வும் படத்தில் கேசவன் என்ற கேரக்டரில் நடித்து தனது திரை வாழ்வில் அடியெடுத்து வைத்தார். அசோக் செல்வனுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் ஆகியோரும் இந்தப் படம் மூலம் பிரபலமாகினர்.

 காதலில் விழுந்த ஹீரோ

காதலில் விழுந்த ஹீரோ

பீட்சா II: வில்லா திரைப்படம் மூலம் ஹீரோவான அசோக் செல்வனுக்கு தெகிடி மூவி நல்ல இன்ட்ரோ கொடுத்தது. ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, நித்தம் ஒரு வானம் ஆகிய படங்கள் அசோக் செல்வன் கேரியரில் டர்னிங் பாயிண்டாக மாறின. இந்நிலையில், சாக்லேட் ஹீரோவாக ரசிகைகளின் மனதை வசீகரித்து வரும் அசோக் செல்வன், காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளை தான் அசோக் செல்வன் காதலித்து வருகிறாராம். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து விரைவில் அசோக் செல்வன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம். 33 வயதான அசோக் செல்வன் தற்போது திருமணத்துக்கு ரெடியாகிவிட்டது ரசிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

அசோக் செல்வன் காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளது பிரபலங்கள், ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த நித்தம் ஒரு வானம் முழுக்க காதல் பின்னணியில் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அசோக் செல்வனின் காதலி யார், அவரது அப்பா யார் என்ற தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X