Hot spot 2 - கதை கேட்கையில் தூங்குறீங்களா?.. ஏன் குத்துறீங்க?.. ஹாட் ஸ்பாட் 2 சந்திப்பில் கடுப்பான அஷ்வின்

சென்னை: குக் வித் கோமாளி மூலம் புகழடைந்த அஷ்வின் செம்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். என்ன சொல்லப்போகிறாய் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், 'கதை கேட்கும்போது தூங்கிவிடுவேன்' என சொல்லி வைக்க; அது பெரிய பஞ்சாயத்தை கூட்டியது. அவரை பலரும் கடுமையாக ட்ரோல் செய்துவிட்டார்கள். இந்நிலையில் அவர் ஹாட் ஸ்பாட் 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய அஷ்வின் ஆஃபிஸ், ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியல்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்டார். அப்போதிருந்து அவருக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. கூடவே ஆல்பம் பாடல்களிலும் தோன்றி நடனமாடி அடையாளம் பெற்றார். அவருக்கென்று குறிப்பிடும் அளவு பெண் ரசிகைகளும் இருக்கிறார்கள்.

கதை கேட்கும்போது தூக்கம்: சூழல் இப்படி இருக்க என்ன சொல்லப்போகிறாய் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. கதை கேட்கும்போது அது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். கிட்டத்தட்ட 40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன். இந்தக் கதையைத்தான் தூங்காமல் கேட்டேன்' என தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு அவருக்கு மோசமான பின்விளைவுகளை கொடுத்தது.

Ashwin Loses Cool Over Sleeping During Story Question at Hot Spot 2 Press Meet
Photo Credit:

ட்ரோலின் உச்சம்: பலரும் அவரை கடுமையாக ட்ரோல் செய்தார்கள். அவருக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டத்தையும் சோஷியல் மீடியாவில் கொடுத்தார்கள். தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை எப்படியோ சமாளித்த அவர்; செம்பி படத்திலும் நடித்தார். அந்தப் படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். இருந்தாலும் அவருக்கு கிடைக்கவேண்டிய வரவேற்போ, வெளிச்சமோ இன்னும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இப்போது ஹாட் ஸ்பாட் 2 படத்தில் நடித்திருக்கிறார்.

ஜனவரியில் ரிலீஸ்: அஷ்வினுடன் ப்ரியா பவானி சங்கர், தர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை அடியே உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். இந்த மாதத்தில் படமானது ரிலீஸாகவுள்ளது. கதை கேட்கும்போது தூங்கிவிடுவேன் என அஷ்வின் சொன்னதையே படத்தில் வசனமாகவும் வைத்திருந்தார் இயக்குநர். இந்நிலையில் ஹாட் ஸ்பாட் 2 படக்குழுவினர் நேற்று சென்னையில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது அஷ்வினிடம் பத்திரிகியாளர் ஒருவர்,'கதை கேட்கும்போது தூங்குனீங்களா இல்லை விழித்துக்கொண்டு இருந்தீர்களா?' என கேட்டார்.

கடுப்பான அஷ்வின்: அதற்கு பதிலளித்த அஷ்வினோ, "நான் உங்களிடம் நேர்மையாக ஒரு கேள்வி கேட்கிறேன். கதை பிடிக்கவில்லை என்றால் யாரும் தூங்குவதே இல்லையா?. படம் பிடிக்கவில்லை என்றால் தியேட்டர்களில் ரசிகர்கள் தூங்கத்தானே செய்கிறார்கள். நான் எதார்த்தமாக சொன்ன விஷயம் அது. அதை கடந்து வந்துவிட்டேன். இப்போதும் அதை வைத்து ஏன் இப்படி குத்துகிறீர்கள்?" என கடுப்புடன் பதில் கேள்வி கேட்டார். மேலும், இந்தப் படத்தில் பணியாற்றும்போது நிறைய பேரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X