அஸ்வினின் ஆல்பம் பாடலான ‘அடிபொலி‘… சும்மா இணையத்தில் அடித்து நொறுக்குது!

சென்னை : குக் வித் கோமாளி அஸ்வினின் நடிப்பில், ஆல்பம் பாடலான அடிபொலி வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்பாடலை 'குக் வித் கோமாளி' சிவாங்கியும் வினீத் ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள்.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

குக்வித் கோமாளி

குக்வித் கோமாளி

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளிக்கு மக்களிடையே தனி இடம் உண்டு. புகழ் செய்யும் சேட்டைகளை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் சும்மா ஸ்மார்ட்டாக இருப்பார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளிக்கு நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான ரசிகைகளை பெற்றார்.

என்ன சொல்ல போகிறாய்

என்ன சொல்ல போகிறாய்

இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக மாறிய அஸ்வின் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 'என்ன சொல்ல போகிறாய்'படம் மூலம் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை ஹரிஹரன் இயக்குகிறார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கிய புகழும் இதில் நடிக்கிறார். விவேக்,மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

Recommended Video

Ashwin படத்தில் நடிக்கும் Avantika Mishra யார்? | Enna Solla Pogirai, Shades of Kadhal
அஸ்வின் நாயகனாக

அஸ்வின் நாயகனாக

தெலுங்கு முன்னணி நடிகர்நானியில் தயாரிப்பில் வெளியாக உள்ள 'மீட் க்யூட்' என்ற ஆந்தாலஜி அஸ்வின் நாயகனாக நடித்துள்ளார். 5 கதைகள் கொண்ட ஆந்தாலஜியை அறிமுக இயக்குநர் தீப்தி கன்டா இயக்கி வருகிறார். இதில், சத்யராஜ், ரோகிணி, ஆதா ஷர்மா, வர்ஷா பொல்லாமா, அகன்ஷா சிங், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வைரலான அடிபொலி

வைரலான அடிபொலி

அஷ்வின் நடிப்பிலான அடிபொலி வெளியான ஆல்பம் பாடல் தற்போது வைரலாகி வருகிறது. அஷ்வின், குஷி ரவி நடித்துள்ள இந்த பாடலுக்கு சித்துக்குமார் இசையமைத்து இயக்கியுள்ளார். இந்த பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். தமிழ் குமரன் எடிட்டிங் செய்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், இந்த பாடலை சிவாங்கி பாடியுள்ளார். அவருடன் இணைந்து வினீஷ் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, ஷெரிஃப் நடனம் அமைத்துள்ளார். அடிபொலி என்ற பாடலை ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகர் மோகன் லால், மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது.

குட்டி பட்டாஸ்

அஸ்வின் இதற்கு முன்பு குட்டி பட்டாஸ் என்ற ஆல்பம் பாடல் வெளியாகி மாபெரும் சூப்பர் ஹிட் அடித்து வைரலானது. இப்பாடல், இதுவரை யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்துள்ளதோடு, ஒன்னரை மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X