twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு: வழக்கம் போல புரியாதபடி ட்வீட்டிய கமல்

    By Siva
    |

    சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் அது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. முதல்வராகத் துடிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சிறைக்கு செல்வாரா இல்லையா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

    Assets case judgement: Kamal tweets

    தீர்ப்பை எதிர்பார்த்து தமிழகமே காத்துக் கிடக்கிறது. கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களும் தீர்ப்பு குறித்து பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.

    இந்நிலையில் இது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    மெரினா உத்வேகம் தீர்ப்பை எதிர்பார்த்து அமைதியாக காத்திருக்கிறது. அவர்கள் எப்பொழுதுமே சட்டம் ஒழுங்கை மதிப்பவர்கள். நீதிமன்றங்களுக்கு கடமை உள்ளது மற்றும் மக்களுக்கும் தான் என தெரிவித்துள்ளார்.

    அவர் ட்விட்டரில் என்ன சொல்கிறார் என்று புரியாமல் ரசிகர்கள் ஒருவர் கூறியிருப்பதாவது,

    @ikamalhaasan என்ன ஆண்டவரே இன்னிக்கி காலைல வந்துட்டிங்க சசி தீர்ப்பு கு எதாவது போடுங்க 😉😉

    English summary
    Kamal Haasan tweeted that, 'The Marina spirit awaits judgement calmly. They've always respected civil order& will maintain it. Courts have a duty & so have the people.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X